தமிழின அழிப்பு நாளை தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழாத ஒரு நாட்டின் இன மக்கள் நினைவேந்தியது முதல் முறையாக லத்தீன் அமெரிக்காவில் நடந்தேறியது.”தமிழீழம் வாழ்கின்றது, போராட்டம் தொடர்கின்றது” எனும் தலைப்பில் Ecuador நாட்டின் Quito தலைநகரத்தில் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவேந்தும் முகமாக தமிழின அழிப்பு நாள் அந்நாட்டு மக்களால் ஒழுங்கு செய்யப்பட்டது.
நீண்ட காலமாக அநீதியை அனுபவித்த மக்கள் இவ் நிகழ்வின் ஊடாக தமது உறுதியான தோழமையினை ஈழத்தமிழர்களுக்கு காட்டி உள்ளார்கள்.இவ் நிகழ்வில் இலங்கை தொடர்பான மக்கள் தீர்ப்பாயத்துக்கு கிடைக்கப்பெற்ற வேண்டுகோளுக்கு அமைய அவர்களின் ஒருங்கிணைப்பில் பல கண்டங்களில் இருந்து ஈழத்தமிழர்களும் கல்விமான்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இவ் நிகழ்வின் ஊடாக Ecuador மக்கள் தமிழின அழிப்பை சர்வதேசமயமாக்கி உள்ளனர்.