நிகழ்வின் சிறப்பு விருந்தினராக பேராசிரியர் Yousif Vawda, ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் சார்பில் ரவி பிள்ளை, லோகி நாயடு மற்றும் சட்டத்தரணி கிரீஸ் கௌவெண்டெர் ஆகியோர் பிரதான பேச்சாளர்களாக சிறிலங்காவில் நடைபெற்ற தமிழின அழிப்புக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்றும் – ஈழத்தமிழர்கள் விடையத்தில் அரசியல் தீர்வை தவிர்த்தும் – பன்னாட்டு நீதியான விசாரணையை தவிர்த்தும் , நீதி மற்றும் சமரசத்தை மட்டும் பற்றி பேச முடியாது என்பதை தமது உரைகளில் வலியுறுத்தினார்கள்.
ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் சார்பாக உரையாற்றிய திரு ரவி பிள்ளை அவர்கள், ஈழத்தமிழர்களுக்கும், ஆபிரிக்க தேசியக் காங்கிரசுக்கும் நீண்ட காலத் தொடர்பு இருப்பதாகவும் தமிழ் மக்களுக்கு தமது முழு ஆதரவை தருவதோடு வருங்காலத்தில் தமிழ் மக்களின் உரிமையை பாதுகாக்க செயற்படுவோம் என்று உறுதியளித்தார்.
நினைவேந்தல் நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய தோழமை அமைப்பு தலைவர் டீஸ் பிள்ளை, மற்றும் பொதுச் செயலாளர் பிரகாசன் படையாச்சி அவர்கள் ஈழத்தமிழர்களின் தேசிய உரிமைகளை பாதுகாக்க தென் ஆபிரிக்க தமிழ் மக்கள் தொடர்ச்சியாக குரல் கொடுப்பார்கள் என்றும் -தமிழர்கள் ஒரு தேசிய இனமாக அங்கீகாரத்தை பெறுவதற்கு தாமும் துணைநிற்போம் என்றும் வலியுறுத்தினார்கள்.