யுத்தம் நிறைவடைந்து 7 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி தொலைவில் இருப்பதாகவே உணரமுடிகின்றது என தெரிவித்த அமெரிக்க கொங்கிரஸ் சபை சிரேஷ்ட உறுப்பினர் டெனி டேவிஸ், தமிழ் மக்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகளுக்குரிய நிரந்தர அரசியல் தீர்வினை விரைந்து காணவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர் டெனி டேவிஸ் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அளித்த போட்டியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்கள் உள்ளிட்ட இலங்கை வாழ் சிறுபான்மை இனத்தவர்களின் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டியது தற்போது முக்கிய விடயமாக பார்க்கப்படுகின்றது.
யுத்தம் நிறைவடைந்து ஏழு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஒடுக்கப்பட்டு வருவதாகவே உணர்கின்றனர். இதனால் அவர்கள் நீதிப் பொறிமுறைகளை நாடுவதில் பின்ன டைவை சந்திப்பதுடன் அவர்கள் எதிர்பார்க்கின்ற நீதியும் வெகு தொலைவிலேயே பார் க்கப்படுகின்றது. புதிய அரசாங்கத்தின் தலைவர்கள் பல்வேறு வாக்குறுதிகளை தேர்தலின் போது அளித்திருந்தனர்.
தற்போது இந்த வாக்குறுதிகளை நிறை வேற்ற வேண்டியது அரசாங்கத்தின் கடமை யாகவுள்ளது. இதன்படி தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வும் விரைந்து எட்டப்பட முயற்சிக்கப்படல் வேண்டும்.
அரசாங்கம் மெய்யான மாற்றங்களை ஏற்படுத்தும் வரையில் அமெரிக்கா இராணுவ உதவிகள் உள்ளிட்ட சில விடயங்களில் தளர்வினை பின்பற்றக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஏழு ஆண்டுகளுக்கு முன்னதாக யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டாலும் சமாதா னம் இதுவரையில் வென்றெடுக்கப்பட வில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள் ளார்.