சிறிலங்காவினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பு புகைப்படக் கண்காட்சி மற்றும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழீழ மக்கள் பேரவை ஏற்பாட்டில் பாரிசுக்கு அண்மையில் உள்ள நகரங்களில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக பாரிசின் புறநகர்ப்பகுதியான பிரான்சு Evry Courcouronnes பகுதியிலும் தமிழின அழிப்புப் புகைப்பட கண்காட்சி Evry பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று (21.05.2016) சனிக்கிழமை காலை 10.00 மணிமுதல் 19.00 மணிவரை இடம்பெற்றது.
Evry நகர மண்டபத்தின் முன்பாக வெளிநாட்டவர்கள் அதிகமாக வந்து செல்லக்கூடிய இடத்தில் குறித்த கண்காட்சி இடம்பெற்றுள்ளது.
Evry நகர பிதாவும் (Ville Evry – maire Francis CHOUAT) குறித்த கண்காட்சியில் கலந்துகொண்டு தனது ஆதரவினை வெளிப்படுத்தினார்.
அதிகளவான வெளிநாட்டு மக்கள் கண்காட்சியைப் பார்த்ததுடன், இதுபற்றித் தாம் இதுவரை அறிந்திருக்கவில்லை என்று பலரும் அதிர்ச்சிவெளியிட்டதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த புகைப்படக் கண்காட்சி தொடர்ந்து ஏனைய தமிழ் சங்கங்களினாலும்; நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.