உலகெங்கிலும் வாழும் பெண்களின் சமவுரிமை சிறந்தோங்க தமிழக முதல்வராக மீண்டும் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் ஜெயலலிதா ஜெயராம் அவர்கள் குரல் கொடுக்க வேண்டுமென்று பிரான்சு தமிழ்பெண்கள் அமைப்பு கேட்டுள்ளது.
இதுகுறித்து பிரான்சு தமிழ்பெண்கள் அமைப்பு விடுத்துள்ள வாழ்த்து அறிக்கையின் முழுவிபரம் வருமாறு:-
ஜெயலலிதா வெற்றிக்கு எங்களின் வாழ்த்துகள்!
கடந்த 16.05.2016 அன்று நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் வெற்றி வாய்ப்பைப் பெற்று செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்கள் மீண்டும் தமிழகத்தின் முதல்வராவதையிட்டு பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
மேலும் தாங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியது போன்று அத்தனை வாக்குறுதி
களையும் நிறைவேற்றப் பாடுபடவேண்டுமென கேட்டுக்கொள்வதோடு, எங்கெல்லாம்
இனங்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் குரல் கொடுக்க
வேண்டுமென்றும், குறிப்பாக இலங்கையில் வாழும் தமிழர்களுக்கான நீதியான
தீர்வான, தங்களால் சட்ட சபையில் ஏகமனதான தீர்மானமாக நிறைவேற்றப்பட்ட
தனித் தமிழீழம் அமையப் பாடுபடவேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு,
உலகெங்கிலும் வாழும் பெண்களின் சமவுரிமை சிறந்தோங்கக் குரல் கொடுக்க
வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம்.
மாண்பு மிகு முதலமைச்சர் அவர்கள் இனி வருகிற தங்களது ஆட்சிக்
காலத்தில் தமிழகத்திற்கும் உலகத் தமிழர்களுக்கும் நன்மை பயர்க்கும்
வண்ணம் நல்லாட்சியை மேற்கொள்வார் என்ற நம்பிக்கையில் மீண்டும்
தமது வாழ்த்துகளை பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பு தெரிவித்துக் கொள்கிறது
நன்றி
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
தமிழ்ப் பெண்கள் அமைப்பு – பிரான்சு