பாரிஸில் ஆயுததாரிகளின் பிடியில் சூப்பர் மார்க்கெட்: இரு ஆயுததாரிகள் சுட்டுக் கொலை!

0
418

09-1420817591-1

பிரான்ஸில் கிழக்கு பாரிஸ் பகுதியில் யூதர் ஒருவருக்குச் சொந்தமான சூப்பர் மார்க்கெட்டில் ஆயுததாரிகள் புகுந்து பலரை பணயக் கைதிகளாக் பிடித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வென்சென் மாவட்டத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் ஆயுததாரிகள் பலரை பணயக் கைதிகளாக பிடித்துள்ளதாகவும் அவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது இருவர் காயமடைந்துள்ளதாகவும் பிரான்ஸ் ஊடகங்கள் கூறுகின்றன.

துப்பாக்கிப் பிரயோகத்தைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான பொலிஸார் அந்தக் கடையை சுற்றி வளைத்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் உள்ள மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். உள்ளூர் பள்ளிக்கூடங்களில் உள்ள பிள்ளைகள் அவர்களின் வகுப்புகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இரண்டு தானியங்கி துப்பாக்கிகளை வைத்திருப்பதாகக் கூறப்படுகின்ற ஆயததாரி, பாரிஸ் புறநகர்ப் பகுதியில் நேற்று வியாழன்று அதிகாலை பொலிஸ் பெண் ஒருவரை சுட்டுக் கொன்றவராக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

முன்னதாக, இந்த ஆயுததாரி, ஷார்லி எப்தோ சஞ்சிகை மீதான தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படுகின்ற குவாஷி சகோதரர்களுடன் தொடர்புடையவர் என்று பிரான்ஸ் ஊடக வட்டாரங்கள் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

copler

பாரிஸில் ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்படும் இரண்டாவது பயங்கரவாத சம்பவம் இதுவாகும்.

கிழக்கு பாரீஸில் உள்ள கோஷர் சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்து பலரை சிறை பிடித்த நபரையும் போலீஸ் படையினர் இன்று இரவு சுட்டுக் கொன்றனர்.

இதன் மூலம் இரு முற்றுகைப் போராட்டமும் முடிவுக்கு வந்தது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகத்திற்குள் புகுந்து 2 பேர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் பலியாகினர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய சயித் குவாச்சி மற்றும் செரிப் குவாச்சி ஆகிய சகோதரர்கள் வடகிழக்கு பாரீஸில் உள்ள தம்மார்டின் டி கோயல் நகரில் உள்ள தொழிற்சாலைக்குள் புகுந்தனர். அவர்கள் ஒருவரை பணையக் கைதியாக பிடித்து வைத்திருந்தனர். அவர்கள் இருக்கும் தொழிற்சாலையை போலீசாரும், ராணுவத்தினரும் சுற்றி வளைத்து இன்று இரவு நடத்திய தாக்குதலில் இருவரும் கொல்லப்பட்டனர்.

paris_police_001

அதேபோல, கிழக்கு பாரீஸில் உள்ள போர்ட் டு  வென்சென்  பகுதியில் இருக்கும் கோஷர் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்த தீவிரவாதி ஒருவர் 5 பேரை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டார். இதனால் பரபரப்பு கூடியது. சூப்பர் மார்க்கெட்டுக்குள் இருந்தவர் அமேதி கவ்லிபாலி (32) என்றும், பாரீஸின் மலகாப் பகுதியில் பெண் போலீஸ்காரரை சுட்டுக் கொன்றவர் அவர் தான் என்றும் கூறப்பட்டது.

இந்த சூப்பர் மார்க்கெட்டை சுற்றி வளைத்த போலீஸ் படையினர் அதிரடியாக தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் கவ்லிபாலி சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் வசம் இருந்த பிணைக் கைதிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மீட்பு பணியின்போது 2 போலீசார் காயம் அடைந்தனர். இதன் மூலம் கடந்த சில நாட்களாக பிரான்ஸை உலுக்கி வந்த தீவிரவாத அச்சுறுத்தல் முடிவுக்கு வந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here