பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு நாள்!

0
3982

சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 15 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்20.05.2023 இன்றாகும்.

22
“தமிழீழ மக்களால் நேசிக்கப்பட்ட மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் மாரடைப்பினால் சாவடைந்தார்” என்கிற செய்தி 20.05.2008 மாலை புலிகளின் குரல் வானொலியில் அறிவிக்கப்பட்டதும் அதனை நம்புவது கடினமானதாக இருந்தது. அச்செய்தி மக்கள் மனங்களை இடிபோல் தாக்கியது. மக்கள் மீது பற்றும் பாசமும் வைத்திருந்த, மக்களாலும் பேரன்புடன் நேசிக்கப்பட்ட ஒரு தளபதியாக திகழ்ந்தவர் பிரிகேடியர் பால்ராஜ். 27.11.1965 ஆம் ஆண்டு பிறந்த பால்ராஜ். முல்லைத்தீவு மாவட்டம், கொக்குத் தொடுவாயைச் சேர்ந்தவர்.

Balraj-in-preparations-for-Elephant-Pass-operation

1984 ஆம் ஆண்டு விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட அவர் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளபட்ட பல்வேறு வெற்றிகரத் தாக்குதல்களில் பங்கேற்றவர். பல வெற்றித்தாக்குதல்களுக்கு தலைமை தாங்கியவர்.தாயகத்தில் ஆக்கிரமிப்புப் படையாக வந்த இந்தியப்படைக்கு சிம்மசொப்பனமாக செயற்பட்டவர். மாங்குளம் படைமுகாம் தாக்கியழிப்பு, ஆனையிறவுத்தளம் மீதான ஆகாய கடல் வெளி நடவடிக்கை, ஓயாத அலைகள்- 01, 02, 03 போன்ற பெரும் தாக்குதல் நடவடிக்கைகளில் பங்காற்றியவர். தாயக நிலப்பரப்புக்களை ஆக்கிரமிக்க சிங்களப்படையினரால் பாரிய அளவில் மேற்கொள்ளபட்ட யாழ்தேவி, ரிவிரச போன்ற படைநடவடிக்கைகளுக்கு எதிரான புலிகளின் தாக்குதல் நடவடிக்கைகளில் முன்னின்று பங்கேற்றவர்.

371

விடுதலைப்புலிகளின் முதலாவது மரபுவழிப் படையணியான சாள்ஸ் அன்ரனி படையணியின் முதலாவது தளபதி என்கிற பெருமையும் இவரையே சேரும். எல்லாவற்றிற்கும் மேலாக எந்த மக்களின் விடுதலைக்காக அவர் போராடினாரோ அந்த மக்களை அதிகம் நேசித்தார். களத்தில் போராளிகளை அன்போடு வழிநடத்தினார். ஆகாய கடல் வெளித் தாக்குதல்களின் போது களமுனைகளில் எடுக்கப்பட்ட காணொளி நாடாவைப்பார்த்த போதே அவர் போராளிகளோடு எவ்வாறு பழகுகின்றார், தாக்குதல்களுக்கு போராளிகளை எவ்வாறு தயார்படுத்துகின்றார் என்பதையெல்லாம் நான் கண்டு அதிசயித்தேன். “ஐயா, எல்லாரும் நடவடிக்கைக்கு தயாராக இருங்கோ. கூடிய வரையும் பிரிந்து நின்று அடிபடுங்கோ அப்போது எங்கட இழப்புக்களை குறைக்கலாம். என்னையா, நான் சொன்னது விளங்குது தானே ஐயா?” இப்படித்தான் பிரிகேடியர் பால்ராஜ் போராளிகளுக்கு அறிவுறுத்தல் கொடுப்பார்.

20ஒரு தளபதியின் கட்டளைப்போலவே அது அமையாது. தாயின் பரிவு போலவே போராளிகளோடு பழகும் விதம் இருக்கும். அவர் களத்தில் வழங்கும் கட்டளைகளை மறுப்பின்றி போராளிகள் ஏற்பார்கள், அவ்வாறான மந்திர வார்த்தைகள் அவை என அவரோடு களத்தில் செயற்பட்ட போராளிகள் என்னிடம் கூறியமை இப்போது நினைவிற்கு வருகிறது. பிரிகேடியர் பால்ராஜ் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு மக்கள் முன் உரை நிகழ்த்தியிருக்கிறார். களமுனைத் தளபதிகளின் உரைகளை விரும்பி செவிமடுக்கின்ற மக்கள் அவர்கள் உரை நிகழ்த்துகின்ற கூட்டங்கள் நிகழ்வுகளுக்கு ஆர்வத்துடன் செல்வது வழக்கம். பிரிகேடியர் பால்ராஜ் கலந்து கொள்கின்றார் என்றால் மக்கள் அந்நிகழ்விற்கு நீண்ட துரங்களிலிருந்தும் வந்து விடுவார்கள் அப்போதெல்லாம் அவரது உரைகளில், வார்த்தைகளில் மக்கள் மீதான நேசிப்பு துலக்கமாக மின்னும்.40

களமுனைத்தகவல்களை, குறிப்பாக சிங்களப்படைகள் ஆக்கிரமித்து முன்னகர முயல்கின்ற பகுதிகளில் நிலைமை என்ன என்பதை அறிந்து கொள்வதில் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டுவது வழக்கமானது. தளபதி பால்ராஜ் அங்கு நிற்கிறார் என்ற தகவல் கிடைத்தால் அதுவே மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்திவிடும். அந்தளவிற்கு மக்களின் நாயகனாக பிரிகேடியர் பால்ராஜ் திகழ்ந்தார். தாயகத்தில் குறிப்பாக வன்னியில் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் காலடி படாத இடங்கள் இல்லை. இனி இந்த மண் அவரது காலடி வருடலுக்காக ஏங்கும்.பிரிகேடியர் பால்ராஜ் குறித்த இக்குறிப்பை நான் எழுதிக்கொண்டிருக்கின்ற வேளையில், அவரது இறுதி வணக்க நிகழ்வுகள் குறித்த தகவல்கள் அறிவிக்கப்படவில்லை. தாயகத்தில் துயரம் கசிந்த வண்ணமிருப்பதைக் காணமுடிகிறது.

Balraj-with-Soosai

ஊரெல்லாம் சோக இசை தவழ்ந்து மக்கள் மனங்களை ஊடுருவுகிறது. பிரிகேடியர் பால்ராஜ் அவர்களது இழப்பை ஏற்றுக்கொள்ள மனங்கள் மறுக்கின்றன. விடுதலைப் போராட்ட வரலாற்றில் இவ்வாறான இழப்புக்கள் தவிர்க்க முடியாதவை என்பதும், காலம் இடைவெளிகளை நிரப்பும் எனபதும் யதார்த்தமே.ஆனாலும், எங்கள் தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் இழப்பு எங்கள் மனங்களில் ஏற்படுத்தியுள்ள துயரமும், வெறுமையும் காலத்தால் அழிக்க முடியாத ஒன்றாகி விட்டது.

– வேனில்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here