நிலச்சரிவில் காணாமல் போனவர்களை உயிருடன் மீட்கும் வாய்ப்புக் குறைவு!

0
139
10191கேகாலை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக ஏற் பட்ட இரண்டு, பாரிய நிலச்சரிவுகளில், சிக்கி 180 பேருக்கு மேல் மரணமாகியிருக்கலாம் என்று அஞ்சப்படு கிறது.
மேற்படி நிலச்சரிவில் அரநாயக்க பகுதியில் உள்ள மூன்று கிராமங்கள் முற்றாக நிலத்தில் புதையுண்டுள் ளன. அங்கிருந்த 230 பேர வரை மீட்கப்பட்ட போதிலும், 200 குடும்பங்களின் கதி என்ன வாயிற்று என்று தெரியவில்லை.
அதேவேளை, நேற்றுமுன் தினம்  அதிகாலை, புலத்கொ ஹ_பிட்டியவில் ஏற்பட்ட நிலச்சரி வில் 18 பேர் காணாமற்போயினர்.மேற்படி இரண்டு இடங்களிலும், முழுவீச்சில் தேடுதல், மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. முப்படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள னர்.
நேற்றுமுன்தினம் இரண்டு நிலச்சரிவுப் பகுதிகளில் இருந் தும் 20 சடலங்கள் மாத்திரம் மீட் கப்பட்டுள்ளன.
அரநாயக்க பகுதியில் 134 பேர் காணாமற்போயிருப்பதாக அதிகாரபூர்வ தகவல்கள் கிடைத் துள்ளதாக, அந்தப்பகுதியில் மீட்புப்பணிகளுக்குப் பொறுப்பாக உள்ள மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.
இதற்கிடையே, நாட்டில் கடந்த சனிக்கிழமை தொடக்கம் கொட்டி வரும் மழை, வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றினால், பலர் பலியாகியுள்ளதாகவும், பெருமளவானோர் காணாமற் போயுள் ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் மூன்றரை இலட்சம் மக்கள் பாதிக்கப்பட் டுள்ளனர்.
இதனிடையே, நிலச்சரி வினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர்கள் சென்று பார்வையிட்டதுடன் பாதிக் கப்பட்ட வர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here