கேகாலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலச்சரிவு ; 150 பேர் காணாமல் போயுள்ளதாகக் கூறப்ப டுகின்றது!

0
233
10182கேகாலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்ற நிலச்சரிவு அனர்த்தங்களின் பின்னர் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் காணாமலும் போயுள்ளதாக இடர் முகாமைத்துவ மையம் அறிவித்துள்ளது.
நேற்றுமுன்தினம் புதன்கிழமை மாலை அரநாயக்க பிரதேசத்திலும்

 இரவு புலத்கோபிட்டிய பிரதேசத்திலும் இந்த அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன.
அரநாயக்க பிரதேசத்தில் இடம்பெற்ற நிலச்சரிவு சம்பவத்தின் பின்னர் பாதிப்புக்குள்ளான மூன்று கிராமங்களை சேர்ந்த சுமார் 150 பேர் காணாமல் போயுள்ளதாகக் கூறப்ப டுகின்றது.
காணாமல் போனதாக கூறப்பட்டவர்களில் இதுவரை 14 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மையம் கூறியுள்ளது.68 ஆண்களும், 57 பெண்களும் என 125 பேர் காணாமல் போயுள்ளதாக அவர்க ளின் குடும்ப உறவுகளின் தகவல்கள் மூலம் அறிய முடிவதாக ஊடகங்களிடம்; பேசிய அரநாயக்க பிரதேச செயலாளரான இஸற் ஏ.எம். பைஷால் கூறினார்.
66 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும், ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புலத்கோபிட்டிய பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிழந்துள்ளதாக கூறப்படும் 16 பேரில் இதுவரை 5 பேரின் சடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
 சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினரான அ.பாஸ்கரன், நிலச்சரிவு அனர்த்தம் பற்றி அந்த பிரதேச செயலகத்தினாலோ அல்லது தோட்ட நிர்வாகத்தினாலோ முன் எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார்.
அரநாயக்க பிரதேசத்திற்கு நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரில் விஜயம் செய்து பாதிக்கப்பட்ட இடங்களையும், அழிவுகளையும் பார்வையிட்டார்.
இந்த நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அனர்த்தங்களினால் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது.
இடர் முகாமைத்துவ மையத்தினால் இறுதியாக வெளியிடப்பட்ட தகவல்களின் படி 83ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 3 இலட்சத்து 52 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இக் குடும்பங்களில் 49ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 2 இலட்சத்து 24ஆயிரம் பேர் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறி 375 நலன்புரி மையங்கள் உட்பட பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here