கடும் மழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களால் இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மழையுடனான வானிலை காரணமாக 4 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 2,96,000 இற்கும் அதிகமானோர் தற்காலிக இடைதங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, அரநாயக்க சிரிபுர பகுதியில் இடம்பெற்ற மண்சரிவினால் இதுவரை 134 பேர் காணாமல் போயுள்ளதாக மேல் மாகாண பாதுகாப்பு படைபிரிவின் கட்டளை தளபதி தெரிவித்தார்.
மண்சரிவினால் 66 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் கட்டளை தளபதி குறிப்பிட்டுள்ளார்.
மீட்கப்பட்ட 14 சடலங்களில் 8 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுதந்த ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்டுள்ள சடலங்களில் 11 சடலங்கள் முழைமையாக மீட்கப்பட்டுள்ளதுடன் 3 சடலங்களில் உடல் பகுதிகள் மாத்திரமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மழையுடனான வானிலைக் காரணமாக மீட்பு பணிகள் நேற்று மாலை ஆறு மணியுடன் நிறுதப்பட்டுள்ளதாகவும் இன்று காலை தொடக்கம் மீண்டும் மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் மேல் மாகாண பாதுகாப்பு படைபிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ள அரநாயக்க பகுதிக்கு நியூஸ்பெஸ்ட் குழுவினர் பாரிய சிரமத்திற்கு மத்தியில் நேற்று பிற்பகல் சென்றடைந்தனர்.
இதேவேளை கேகாலை புலாத்கொஹூபிட்டிய களுபஹனவத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த ஐந்து பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த மண்சரிவில் சிக்கி காணமல் போன மேலும் 11 பேரின் சடலங்கள் தேடப்பட்டு வருவதாக புலத்கொஹுபிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
கடுகண்ணாவையில் மண்சரிவில் சிக்கி காணமல் போன 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மண்சரிவி்ல் மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் கூறினர்.
அத்தோடு அதிக மழையுடனானவானிலைக் காரணமாக இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவத்தின் பிரதி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
21 பேர் இதுவரை காணமல் போயுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் யட்டியந்தோட்டை பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கையினால் அங்கிருந்து சுமார் 50 குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கொழும்பில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் நேற்று இரவு முன்னெடுக்க்பட்டதாக அவர் கொழும்பு மாவட்ட செயலாளர் கூறியுள்ளார்.
கொலன்னாவ. கடுவலை மற்றும் கொழும்பு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளை சேர்ந்தவர்களே வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வௌ்ளத்தில் சிக்குண்டவர்களை மீட்கும் பணிகள் கடற்படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மீனவப் படகுககளும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாவட்ட செயலாளர் கூறியுள்ளார்.
கனளி ஆறு பெருக்கெடுத்துள்ளமைக் காரணமாகக்ஷே அதனை அண்மித்த பகுதிகளில் வௌ்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தற்போது ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாகவும் இடர்முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 101 தங்காலிக இடைதங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் .
சுமார் 1,00,150 பேர் வரை தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாவட்ட செயலாளர் சுனில் கன்னங்கர தெரிவித்துள்ளார்.
இதேவேளை வெள்ளப்பபெருக்கினால் 1,22,032 பேர் கம்பஹா மாட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்தார். கம்பஹா மாட்டத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.