முள்ளிவாய்க்கால் தமிழனப் படுகொலையின் 7ம் ஆண்டு நினைவு 18.05.2016 புதன்கிழமை அன்று ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பிய ஆலோசனை சபை முன்றலில் பிற்பகல் 15.30 தொடக்கம் 17.00 வரை நடைபெற்றது. இந் நிகழ்வில் 100க்கணக்கான மக்கள் உணர்வுடன் கலந்து கொண்டிருந்தனர்.
நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கமும் செய்யப்பட்டதுடன் படுகொலை நினைவு சுமந்த பதாதைகளைத் தாங்கிய வண்ணம் சிறுவர் முதல் பெரியவர் வரை மிகவும் உணர்வுடன் நின்றிருந்தனனர்.
சிறீலங்கா அரசினால் தொடர்ந்து நடாத்தப் பட்டு வருகின்ற தமிழின அழிப்பை தடுத்து நிறுத்தி, நீதியைப் பெற்றுத் தரவும், அனைத்துலக விசாரணையை முன்னெடுக்கவும் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தரக்கோரியும்உள்ளடங்கிய மகஜர் ஐரோப்பிய ஆலோசனைச் சபையின் பொதுச் செயலரிடம் கையளிக்கப்பட்டது.
இறுதியில் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற முழக்கத்துடன் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு நிறைவுக்கு வந்தது.