பிரான்ஸ் பத்திரிக்கை அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை பொலிசார் சுட்டுக்கொன்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரான்சில் சார்லி ஹெப் டோ பத்திரிக்கை மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
இவர்களது பெயர் சைத் கெளச்சி(வயது 34), செரீப் கெளச்சி(வயது 32) எனவும், அவர்களது படத்தையும் பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
இவர்களை பாரிசுக்கு வட கிழக்கே பொலிசார் கார்களில் விரட்டிச் சென்றனர்.
தப்பித்துச் செல்லும் போது பொலிசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதால், பொலிசாரும் பதில் தாக்குதல் நடத்தியபடி காரை விரட்டிச் சென்றனர்.
முன்னதாக Montagny பகுதியில் காரை கடத்திய தீவிரவாதிகள், பின்னர் Dammartin-en-Goele என்ற இடத்தில் இருந்து ஒரு நபரை காருக்குள் இழுத்துப் போட்டுக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இந்த சாலை பாரிசின் Charles de Gaulle விமான நிலையத்தை கடந்து செல்லும் சாலையாகும். இதனால் இவர்கள் விமான நிலையத்தை தாக்கச் செல்லலாம் என்றும் கருதப்பட்டது.
ஆனால் இருவரும் விமான நிலையத்துக்கு அருகே உள்ள தொழிற்சாலைக்குள் நுழைந்து விட்டனர், இவர்களை பொலிசார் சுற்றி வளைத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியது.
சகோதரர்களான செரீப் மற்றும் செட் கொவாச்சி ஆகியோர் ஒரு வெளிப்புற தொழில் எஸ்டேட்டில் அச்சகத்தில் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பயங்கரவாத தடுப்பு போலீசார் மற்றும் இராணுவ படையினர் முற்றுகையிட்டனர்.
இவர்கள் ஒரு பெண்ணை பணையக்கைதியாக சிறைபிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது.
தாக்குதல் நடத்தி பிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் அதிரடியாக தாக்குதல் நடத்தி, இரண்டு பேரையும் சுட்டுக்கொன்றனர்.
மேலும் பிடித்து வைத்திருந்த பணையக் கைதிகளையும் பொலிஸார் பத்திரமாக மீட்டுள்ளனர்.