இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் 6ஆவது ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசே பதவியேற்றுக் கொண்டார்.
7ஆவது ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு சில மணிநேரங்களில் இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் 6ஆவது ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்ற அறிவிப்பினை தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்தார்.
அதனையடுத்து இன்று மாலையே ஜனாதிபதி மற்றும் பிரமர் பதவிகளை ஏற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று மாலை 6.30 மணிக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பதவியேற்றுக்கொண்டனர்.
உயர் நீதிமன்ற நீதியரசர் கே. ஶ்ரீபவன் முன்னிலையில் மைத்திரிபால சிறிசேன புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டார்.
இதன்பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.
பதவியேற்பு வைபவத்திற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க , சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன, றிசாட் பதியுதீன் , முப்படைகளின் அதிகாரிகள், ஐ.தே.க உறுப்பினர்கள் மற்றும் ஏனைய பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.