முள்ளிவாய்க்கால் நினைவு நாள் : தமிழர் தாயகம் எங்கும் நிகழ்வுகள்!

0
810

mulliஇறுதிக்கட்ட யுத்தத்தில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட உச்சகட்ட இனவழிப்பு நாளான முள்ளிவாய்க்கால் தினம் தமிழர் தாயகம் எங்கும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்படவுள்ளன. இன்றைய தினம் கருப்பு கொடிகளை கட்டி துக்க தினமாக அனுஸ்டிக்குமாறும் பொது அமைப்புக்கள், கட்சிகள் என்பன கோரியுள்ளன.

வன்னியில் நடைபெற்ற யுத்தத்தில் பல இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டு இந்த வருடத்துடன் எழு ஆண்டுகள் நிறைவுறுகின்றன. இதில் கொல்லப்பட்ட ஒட்டுமொத்த தமிழ் மக்கள் நினைவாக பொது நினைவு தினமாக மே 18 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டு அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றன.

இதனை தாயகத்திலுள்ள தமிழ் மக்களும் புலத்திலுள்ள தமிழ் மக்களும் தமது உறவுகள் நினைவாக அனுஷ்டித்து வருகின்றன. குறிப்பாக தாயகத்தில் உள்ள கட்சிகளான தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, ஆகிய கட்சிகளும், வடக்கு மாகாண சபை, யாழ்.பல்கலைக்கழகம், தமிழ் சிவில் சமூக அமையம் ஆகியனவும் பரந்தளவில் அனுஷ்டித்து வருகின்றன.

இதே போல புலத்திலும், பிரித்தானிய தமிழர் பேரவை, அனைத்துலக தமிழர் பேரவை, கனடா, ஜேர்மன், பிரான்ஸ், இந்தியா, போன்ற நாடுகளிலும் மிகப்பெரும் அளவில் அனுச்டிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நாளைய தினமும் உணர்வெளிச்சியுடன் அனுஸ்டிப்பதற்கு பொதுமக்களை ஒன்று திரளுமாறு அழைப்பு விடுத்துள்ளன.

இன்றைய தினம் ஒன்பது மணியளவில் முள்ளிவாய்க்காலில் வடக்கு மாகாண சபையினது ஏற்பாட்டில் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தலைமையில் நினைவு சுடர் ஏற்றப்பட்டு உணர்வு பூர்வமாக அஞ்சலி நடைபெறவுள்ளது. இதில் வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள், அவைத்தலைவர்கள் ஆகியர் கலந்து கொள்ளவுள்ளனர். இதற்கு அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நினைவு தினம் முள்ளிவாய்கால் கிழக்கில் – பி.ப 3.30 மணி (புனித சின்னப்பர் ஆலய வீதியால் செல்லும் கடற்கரை- புதுக்குடியிருப்பு – முல்லை வீதியில் 46வது கி.மீ இல் அமைந்துள்ள ஆண்டவர் சொருபத்திற்கு அருகில் செல்லும் வீதி)
மட்டக்களப்பு வாகரையில் – மாணிக்கபுரம் ஆற்றங்கரையில் மு.ப 10.00 மணிக்கு
நடைபெறவுள்ளன இந்நிகழ்வுகளில் அனைத்து பொது மக்களையும் கலந்து கொண்டு உயிரிழந்த மக்களின் ஆத்ம சாந்திக்காக பிராத்திக்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

வவுனியா பிரஜைகள் குழு, முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் உரிமைக்கான அமையம், தமிழர் தாயகத்தில்கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடியறியும் குடும்பங்களின் சங்கங்கள் ஆகியவற்றின் நினைவேந்தல் நிகழ்வுகள் காலை 10.30 மணியளவில் முள்ளிவாய்க்காலில் நடைபெறவுள்ளது. இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இலங்கை அரசாங்கமானது, ஐந்தரை இலட்சத்துக்கும் அதிகமான மக்களை ஒன்றரை கிலோமீற்றர்கள்நீரேந்து நிலப்பரப்புக்குள் (களப்புக்குள்) முற்றுகையிட்டு, கொத்துக்குண்டுகளாலும், பல்குழல்எறிகணைகளாலும், இரசாயன எரிஅமில வாயுக்களாலும் நிகழ்த்திய மாபெரும் தமிழினப் படுகொலையை– மனிதப் பேரவலத்தை – மனித உரிமை மீறல்களைக் கண்டித்து, பெரும் மக்கள் கூட்டமாக ஒன்றுகூடி ‘நீதி கேட்கும் பொறிமுறை நினைவேந்தல் எழுச்சி நிகழ்ச்சிக்கு மே 18 புதன்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில் ஏற்பாடுகள் செய்துள்ளோம்.

2009ம் வருடம் இறுதி யுத்த முற்றுகை வலயமாகவும், சிறீலங்கா அரசின் கொலைக்களமாகவும்ஆக்கப்பட்டு, ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டமுள்ளிவாய்க்கால் மண்ணில் ஒன்றுகூடி, தமிழர் தேசியப்பெருந்துயரை உலகுக்கு பறைசாற்றுவதோடு,வீழ்ந்த இடத்தில் வீரத்தின் துவக்கமாக எழுச்சி கொள்ளும் தமிழ்த்தேசிய இனத்தின் ஒன்றுகூடலாகவே,

இம்முறை ‘முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை ஏழாம் வருட நினைவேந்தல்’ நிகழ்ச்சியை பிரகடனம்செய்துள்ளோம். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் ஜீன் மாதம் தொடங்கவுள்ள காலச்சூழலில், சிறீலங்காஅரசின் இனப்படுகொலைக்கு உட்பட்டும் தப்பியும் பிழைத்திருக்கும் தமிழ்த்தேசிய இனம், கந்தகத்தாலும்குருதியாலும் தோய்த்து எடுக்கப்பட்டு இனப்படுகொலை நிகழ்த்தப்பட்ட மண்ணில் நின்றுகொண்டு நீதிகேட்கும் குறித்த மே 18 தேசிய ஒன்றுகூடலானது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது.

எனவே இந்த உயரிய நோக்கத்தை சிதைக்கும் படியாக, தத்தமது சௌகரியங்களுக்காக சுயநலன்களுக்காக முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவேந்தலை சிறு சிறு குழுக்களாக,உதிரிகளாக அங்கொன்றும் இங்கொன்றுமாக கூட்டங்களை நடத்தி,  மே 18 புதன்கிழமை அன்றுமுள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ள ‘தமிழ்த்தேசிய இனத்தின் ஒன்றுகூடலுக்கு’ மக்களை பெரும்கூட்டமாக கலந்துகொள்ளவிடாது தடுக்கும் – குழப்பங்களை ஏற்படுத்தும் அனைத்து நிகழ்ச்சிகளையும்

உடனடியாக இரத்து செய்யும்படியும் – தவிர்த்துக்கொள்ளும்படியும் தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் உள்ள சகல பிரஜைகளையும் அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம். ‘முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை ஏழாம் வருட நினைவேந்தல்’ ஆனது, இம்முறை ‘நீதி கேட்கும்பொறிமுறை நினைவேந்தல் எழுச்சி நிகழ்ச்சி’யாக, ‘தமிழ்த்தேசிய இனத்தின் ஒன்றுகூடல்’ ஆக, அதுவும்இனப்படுகொலை நடத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் மட்டுமே இடம்பெறும் என்பதையும்சிரத்தையோடு கவனத்தில்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நான்… நான்… என்று தன்னிலை முன்னிறுத்தல்களை முற்றிலுமாகத்துறந்து, நாங்கள் அதாவது இனம்என்று ஒன்றுபடுமாறு’ அனைத்து தரப்புகளுக்கும் வலிறுத்துகின்றோம்.   மாவீரத்தெய்வங்களினதும் – மேன்மக்கள் ஆத்மாக்களினதும் உன்னத தியாகங்களை நலினப்படுத்தும் மலினப்படுத்தும் வகையில், ‘அங்கு அவர்கள் காலை செய்கிறார்கள், இங்கு நாங்கள் மதியம் அல்லதுமாலை செய்கிறோம்’ எனும் குறுமனநிலை – குழுநிலை வாதங்களை உடனடியாக களைந்து,

அனைத்து அரசியல் கட்சிகளினதும் தலைவர்கள் – பிரமுகர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்குகிழக்கு மாகாணசபைகளின் உறுப்பினர்கள் (தத்தமது ஆதரவாளர்களுடன்), மதத்தலைவர்கள், மனிதஉரிமை செயல்பாட்டாளர்கள், சிவில் சமுக அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவர்கள், கல்வியாளர்கள்,பேராளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், சமுக ஆர்வலர்கள், பொதுமக்கள் என்று சகல

பிரஜைகளையும் மே 18 அன்று, முள்ளிவாய்க்காலை நோக்கி பெரும் மக்கள் கூட்டமாக உணர்வுபூர்வமாகதிரண்டு வருமாறு அழைப்பு விடுக்கின்றோம்.மே 18 புதன்கிழமை அன்று தமிழர் தேசியப்பெருந்துயரை உலகுக்கு பறைசாற்றுவதற்காக, தமிழர்தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் முழுமையான ஹர்த்தாலுக்கு (முழுநாள் கடையடைப்புக்கு) அனைத்துவர்த்தக சங்கங்களையும், தனியார் பேருந்து போக்குவரத்து சங்கங்களையும், வன்முறைகள் படுகொலைகளுக்கு உள்ளாக்கப்பட்டு உயிர்நீத்த எமது உறவுகளை விசுவாசமாகவும், நன்றியுணர்வாகவும்

நினைவுகூர்ந்து அஞ்சலிப்பதை தமிழ் இனத்தின் (ஒவ்வொரு பிரஜையினதும்)தேசியக்கடமையாகக்கொண்டு முழுமையான ஒத்துழைப்பை உளத்தூய்மையோடு வழங்குமாறும்கேட்டுக்கொள்கின்றோம்.

 

பொதுச்சுடர் ஏற்றும் மரபு

நான் பெரிது – நீ பெரிது என்று தொடரும் குறுமனநிலைப்போக்கை களைந்து இனம் அதாவது நாடு பெரிதுஎன்று வாழும் உணர்வை தமிழ்ச்சமுகத்தில் வளப்படுத்துவதற்காக இம்முறை, ‘முள்ளிவாய்க்கால் தமிழ்இனப்படுகொலை ஏழாம் வருட நினைவேந்தல்’ நிகழ்ச்சியில் பொதுச்சுடரை,தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களைச்சேர்ந்த ஒருவர், அல்லது முள்ளிவாய்க்கால் தமிழ்இனப்படுகொலையை ஒளிப்பதிவுசெய்து ஐ.நா சபை வரை இனப்படுகொலை ஆதாரமாக கொண்டுசென்று சேர்ப்பித்த களப்படப்பிடிப்பாளர் (ஊடகவியலாளர்) ஒருவர்,அல்லது மருத்துவ பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவிய அந்த அபாயகரமான சூழலில் மானுடநேயமருத்துவப்பணியாற்றி எச்சசொச்ச உயிர்களைக்காப்பாற்றிய மருத்துவர் ஒருவர், அன்றி முள்ளிவாய்க்கால்கொலைக்களத்தில் தாய் தந்தை இருவரையும் இழந்து சிறுவர் இல்லங்களில் பராமரிக்கப்பட்டுவரும் சிறுவர்சிறுமிகளில் ஒருவர் ஏற்றுவதே உசித்தமானதாகவும், அதுவே எமது நிலைப்பாடாகவும் உள்ளது. என்பதையும் சகல பிரஜைகளுக்கும் வினயமாக அறியத்தருகின்றோம். என அதில் தெரிவிக்கபட்டுள்ளது.

முள்ளிவாய்க்காலில் வகை தொகையின்றி இன அழிப்பு செய்யப்பட்ட எமது மக்களின் ஆத்ம சாந்திவேண்டி

மன்னர் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் மே 18 ஆத்மசாந்தி பிராத்தனை மன்னார் நகர மண்டபத்தில் காலை 10.00மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் “2009ம் ஆண்டிற்கு பின்னர் தமிழ் மக்கள்எதிர்நோக்கும் சாவால்கள்” என்னும் தலைப்பில் சிறப்புரை இடம் பெறவுள்ளதுடன் பாதிக்கப்பட்டகுடும்பங்களின் மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்படவுள்ளது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நினைவு தினம் மாட்டீன் வீதியில் அமைந்துள்ள அலுவலகத்திலும், யாழ்.பல்கலையின் நினைவு தினம் கைலாசபதி கலையரங்கிலும் நடைபெறவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here