போரில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் 6 ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வு யாழ். தென்மராட்சி வரணிப் பிரதேசத்தில் இடம்பெற்றது.
வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
யாழ். தென்மராட்சி வரணியில் 52 ஆவது படைப்பிரிவின் இராணுவத் தலைமையகம் அமைந்திருந்த இடத்தில்
இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது மந்துவில் கேலத்து அம்மன் கோவில் திருவிழாவில் காணாமற்போன 8 இளைஞர்களையும் மிருசுவிலில் படுகொலை செய்யப்பட்டவர்களையும் நினைவுகூர்ந்து தீபச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள்
உப தவிசாளர் எஸ்.சதீஸ் இந்த நிகழ்வில் கலந்கொண்டிருந்தார்.