மே 18 தமிழ் இன அழிப்பு நாள் நினைவேந்தல் 2016
ஸ்ரீலங்கா அரசினால் தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட இன அழிப்பு யுத்தத்தில் கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூரும் நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் எதிர்வரும் 18ம் திகதி புதன்கிழமை இரண்டு இடங்களில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முள்ளிவாய்கால் கிழக்கில் – பி.ப 3.30 மணி (புனித சின்னப்பர் ஆலய வீதியால் செல்லும் கடற்கரை- புதுக்குடியிருப்பு – முல்லை வீதியில் 46வது கி.மீ இல் அமைந்துள்ள ஆண்டவர் சொருபத்திற்கு அருகில் செல்லும் வீதி))
மட்டக்களப்பு வாகரையில் – மாணிக்கபுரம் ஆற்றங்கரையில் மு.ப 10.00 மணிக்கு
இந்நிகழ்வுகளில் அனைத்து பொது மக்களையும் கலந்து கொண்டு உயிரிழந்த மக்களின் ஆத்ம சாந்திக்காக பிராத்திக்குமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
கறுப்புநாளாக கடைப்பிடிக்கவும்
மேலும் இனஅழிப்பு நடைபெற்ற மே18ம் திகதி கேளிக்கை நிகழ்வுகளையும் மங்களகரமான நிகழ்வுகளையும் தவிர்த்து கறுப்பு நாளாக கடைப்பிடிக்குமாறும் வேண்டுகின்றோம்.
மேலும் போர்க்காலத்தில் தமிழ் மக்கள் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடை காரணமாக பெருமளவான மக்கள் பட்டினிச் சாவுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டது. எமது இரத்த உறவுகள் சந்தித்த அந்தக் துயரத்தை நினைவு கூரும் வகையில் அன்றய தினம் அறுசுவையற்ற கஞ்சியினை ஒருவேளை உணவாக கடைப்பிடிக்குமாறும் கோருகின்றோம். தொடர்புகளுக்கு: 0773024316 , 0212212530
நன்றி
செ.கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி