பிரான்ஸின் சார்லி ஹெப்டோ சஞ்சிகை அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து இரு சந்தேக நபர்களை தேடிவரும் பொலிஸார் ஏழு பேரை கைது செய்துள்ளனர்.
பிரதான சந்தேக நபர்களுடன் தொடர்பு பட்ட இந்த ஏழு பேரும் தலைநகர் பாரிஸின் ரையிம் மற்றும் சார்லவில்லே பகுதிகளில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலை நடத்திய இரு சகோ தரர்களினதும் புகைப்படம் வெளியிடப் பட்டுள்ளது.
பாரிஸில் இருக்கும் சார்லி ஹெப்டோ சஞ்சிகை அலுவலகத்திற்குள் நேற்று முன்தினம் புகுந்த இந்த துப்பாக்கிதாரிகள் இஸ்லாமிய வாசகங்களை கூறியபடி நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
இதனிடையே, பாரிஸ{க்கு தெற்கே நேற்று வியாழன் காலை நடந்த மற்றொரு துப்பாக்கிச் சு+டு சம்பவத்தில் இருவர் காயமடைந்திருப்பதாக பிரான்ஸ் பொலிஸார் கூறினர்.
இதில் ஒருவர் போலிஸ் அதிகாரி என்றும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பிரான்ஸ் உள்துறை அமைச்சர் பெர்னார்ட் காஸெ னெவு, இந்த தாக்குதலை நடத்தியவர் இன்னும் பிடிபடவில்லை என்று கூறினார்.
இந்த சம்பவமும் நேற்று முன்தினம் பாரிஸில் நடந்த சம்பவமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையா என்பது தெளிவாக வில்லை.
சஞ்சிகை அலுவலகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து ஜனாதிபதி பிரான்கொயிஸ் ஹொலன்டே பாரிஸில் அவசர அமைச்சரவைக் கூட் டத்தை நடத்தினார். புதன் மதியம் நாடெங்கும் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பிரதான சந்தேக நபர்கள் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருப்பதோடு மூன்றாவது சந்தேக நபர் சரணடைந்து விட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகத்திற்குரிய இரண்டு சகோதரர் களின் புகைப்படத்தை பிரான்ஸ் பொலிஸார் வெளியிட்டுள்ளது. இவர்கள் குறித்து தகவல் அறிந்தால் உடனடியாக பொலிஸாருக்கு தெரிவிக்க பொதுமக்கள் அறிவுறுத் தப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து பிரான்ஸ் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. செரீப் கௌவு’p என்ற 32 வயது வாலிபருக்கும், அவரது சகோதரருக்கும் எதிராகவே பொலிஸார் பிடியாணை பிறப்பித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் செரீப் கௌவு’p, ஜpஹாத் போராளிகளை ஈராக்கிற்கு அனுப்பும் குழுவுடன் தொடர்புபட்டதற்காக 2008 ஆம் ஆண்டு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவராவார்.
மூன்றாவது சந்தேக நபரான 18 வயது ஹமித் முராத் தனது பெயர் தொலைக் காட்சி செய்தியில் ஒளிபரப்பானதை அடுத்து பொலிஸில் சரணடைந்துள்ளார்.
பாரிஸ் நகரில் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டிருப்பதோடு ஊடக அலுவல கங்களுக்கு முன்னால் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
சார்லி ஹெப்டோ சஞ்சிகையில் நடத் தப்பட்ட தாக்குதலில் அந்த சஞ்சிகையின் ஆசிரியர் உட்பட எட்டு ஊடகவியலாளர் கள், பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பத்திரிகைக்கு வந்தவர் கொல்லப்பட் டுள்ளனர்.
குறித்த சஞ்சிகையின் ஆசிரியர் பீட கூட்டம் நடந்து கொண்டிருந்தபோதே துப்பாக்கிதாரிகள் ஊடுருவியுள்ளனர். இந்த தாக்குதலில் மேலும் ஏழு பேர் காயமடைந்தனர்.
துப்பாக்கிதாரிகள் தப்பிச் செல்லும் முன்னர் வீதியில் இருந்த இரு பொலிஸ் அதிகாரிகளையும் சுட்டுக் கொன்றுள்ளனர்.
சார்லி ஹெப்டோ சஞ்சிகை சமகால நிகழ்வுகள் குறித்து நையாண்டியாக செய்திகளை வெளியிட்டு வருகிறது. இந்த சஞ்சிகை கடந்த 2011 ஆம் ஆண்டு இறைத் தூதர் முஹமது நபியின் கேலிச்சித்திரம் ஒன்றை வெளியிட்டு முஸ்லிம்களின் ஆத்திரத்திற்கு உள்ளானது. இதனையொட்டி இந்த சஞ்சிகை மீது பெட்ரோல் குண்டு தாக்குதலும் இடம்பெற்றது.
தாக்குதல் நடத்த வந்த துக்கிதாரிகள் “இறைத்தூதர் முஹமதுவுக்காக நாம் பழிதீர்க்க வந்தோம்” என்றும் “அல்லாஹ{ அக்பர்” என்றும் கூச்சலிட்டதாக சம்பவத்தை பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பிரான்ஸில் சார்லி ஹெப்டோ சஞ்சிகை மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து, பிரான்ஸின் பல பகுதிகளில் பல பள்ளி வாசல்கள் தாக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸில் நீதித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
பாரிஸ{க்கு மேற்கே லெ மான்ஸ் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்று கையெறி குண்டுகளால் தாக்கப்பட்டது. பிரான்ஸில் இந்த சம்பவத்துக்கு பின்னர் தங்கள் சமுதாயத்துக்கு எதிரான எதிர்தாக்குதல்கள் தொடுக்கப்படலாம் என்று அஞ்சுவதாக சில முஸ்லிம் பிரமுகர்கள் கூறியிருக்கின்றனர்.
பிரான்ஸில் முஸ்லிம் தலைவர்கள் இந்தத் தாக்குதல்களைக் கண்டித்துள் ளனர். உலகெங்கும், பல தலைவர்கள் பாரிஸ் தாக்குதல்களைக் கண்டித்துள்ளனர். அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் இது ஒரு வர்ணிக்க முடியாத கொ^ரம் என்று கூறினார்.
சிட்னியில் கடந்த மாதம் நடந்த தாக்குதலை ஒப்புமை காட்டிப் பேசிய அவர், இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) அமைப்பு உலகின் மீது போர் தொடுத்திருக்கிறது என்றார்.
மலேசிய பாதுகாப்பு அமைச்சர் ஹி’h முத்தீன் ஹ{சேன் இந்தக் கொலையாளிகள் இஸ்லாத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த வில்லை என்றார்.
சுன்னி முஸ்லிம்களின் மதிப்புக்குரிய எகிப்தில் இருக்கும் அல் அஸ்ஹர் பல்கலைக் கழகமும் இந்த தாக்குதலை கண்டித்துள்ளது.