சிறிலங்காவினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பு புகைப்படக் கண்காட்சி மற்றும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழீழ மக்கள் பேரவை ஏற்பாட்டில் பாரிசுக்கு அண்மையில் உள்ள நகரங்களில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக பிரான்சு ஆர்ஜொன்தே பகுதியிலும் ஆர்ஜொன்தே தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் மே 18 நினைவு சுமந்த கவனயீர்ப்பு நிகழ்வு நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
ஆர்ஜொன்தேயில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவுத்தூபி அமைந்துள்ள இடத்திலேயே குறித்த கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஆர்ஜொன்தே தமிழ்ச்சோலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கறுப்பு உடைகளை அணிந்தவாறு கலந்துகொண்டு தீபம் ஏற்றி வணக்கம் செலுத்தினர்.
Home
சிறப்பு செய்திகள் பிரான்சு ஆர்ஜொன்தே பகுதியில் இடம்பெற்ற மே 18 நினைவு சுமந்த கவனயீர்ப்பு நிகழ்வு!