பிரான்சு பாரிஸ் நகரில் மே 18 தமிழின அழிப்பு நாள் பேரணி La Chapelle யில் இருந்து ஆரம்பித்து குடியரசு சதுக்கத்தில் (Place de la République) முடிய வேண்டிய பேரணி, தற்போது பிரான்சில் பரவலாக அரசாங்கம், புது தொழிலாளர் சட்டம் கொண்டுவருவதை எதிர்த்து நடாத்தும் போராட்டங்கள் வன்முறையில் முடிவதை யாவரும் அறிந்திருப்பீர்கள். இந்த சூழலில் தொழிலாளர் சங்கங்கள் மற்றும் மாணவர்கள் குடியரசு சதுக்கத்தில் நிலை கொண்டு தொடர்ச்சியான போராட்டங்களை நடாத்திக் கொண்டு இருப்பதால், பாதுகாப்பை உறுதி படுத்த முடியாத சூழலில் எமது மே 18 பேரணி La Chapelle மெட்ரோ நிலையத்தின் அருகாமையில் இருந்து ஆரம்பமாகி Rue de Faubourg Saint Denis ஊடாக Gare de Nord சென்று Rue La Fayette வலது பக்க தெருவூடாக திரும்பி பின்பு இடது பக்கமாக Rue de Saint Quentin ஊடாக Boulevard Magenta பக்கமாக சென்று Gare de l ‘est முன்பாக Rue de 8 Mai 1945 ஊடாக சென்று பின்பு Rue du Faubourg Saint Martin வழியாக Rotonde de la Villette வழியாக Jaures metro நிலையத்துக்கு அருகாமையில் Place de la Bataille de Stalingrad இல் முள்ளிவாய்க்கால் இறுதி மண் மீட்பு யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட பொது மக்கள் மற்றும் போராளிகள் நினைவாக வணக்க நிகழ்வும் - தொடர்ச்சியான எமது நீதிக்கான போராட்டத்தை வலியுறுத்தி பொதுக் கூட்டமும் நடைபெறும்.
மேலதிக தொடர்புகளுக்கு: பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழீழ மக்கள் பேரவை 01 43 58 04 21 – 06 52 72 58 67 – 06 62 84 66 06