பிரான்சு Ivry-sur-Seine பகுதியில் இடம்பெற்ற மே 18 நினைவு சுமந்த தமிழின அழிப்புக் கண்காட்சி!

0
253

சிறிலங்காவினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பு புகைப்படக் கண்காட்சி மற்றும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழீழ மக்கள் பேரவை ஏற்பாட்டில் பாரிசுக்கு அண்மையில் உள்ள நகரங்களில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக நேற்று சனிக்கிழமை பிரான்சு Ivry-sur-Seine பகுதியிலும் தமிழின அழிப்புப் புகைப்பட கண்காட்சி பிற்பகல் 13.00 மணிமுதல் 18.00 மணிவரை இடம்பெற்றது. Ivry-sur-Seine நகர மண்டபத்தின் முன்பாக குறித்த கண்காட்சி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அதிகளவான வெளிநாட்டு மக்கள் கண்காட்சியைப் பார்த்ததுடன், Ivry-sur-Seine  தமிழ்ச்சோலை மாணவர்களும் கலந்துகொண்டனர்.
இதேவேளை, நேற்று சனிக்கிழமை Mairie de Clichy   பகுதியிலும் மே 18 கவனயீர்ப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.
தொடர்ந்து வரும் மே 18 வரை பாரிசின் பல பகுதிகளிலும் குறித்த நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளதுடன், பொதுமக்களை குறித்த நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு அழைப்புவிடுத்துள்ளனர்.ivry 1

ivri 2
ivry 3 ivry 4 ivry 5 ivry 6 ivry 7 ivry 8

ஊடகப்பிரிவு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here