சிறிலங்காவினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பு புகைப்படக் கண்காட்சி மற்றும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழீழ மக்கள் பேரவை ஏற்பாட்டில் பாரிசுக்கு அண்மையில் உள்ள நகரங்களில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக நேற்று வெள்ளிக்கிழமை பிரான்சு செந்தெனி பகுதியிலும் தமிழின அழிப்புப் புகைப்பட கண்காட்சி காலை 8.00 மணிமுதல் இரவு 20.00 மணிவரை இடம்பெற்றது. பழமைவாய்ந்த செந்தெனி தேவாலயத்தின் முன்பாக குறித்த கண்காட்சி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அதிகளவான வெளிநாட்டு மக்கள் கண்காட்சியைப் பார்த்ததுடன், பொறுமையோடு விடயங்களையும் கேட்டுச்சென்றனர்.
தொடர்ந்து வரும் மே 18 வரை குறித்த நிகழ்வுகள் பாரிசின் பல பகுதிகளிலும் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளதுடன், பொதுமக்களை குறித்த நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு அழைப்புவிடுத்துள்ளனர்.