பசிலுக்கு பாரிய நிபந்தனைகளுடன் பிணை!

0
198
Basil-Rajapakse-415x260நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட, பசில் ராஜபக்‌ஷவுக்கு, மாத்தறை நீதிமன்றத்தினால், பாரிய நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டுள்ளது.
தலா ரூபா 10 இலட்சம் கொண்ட மூன்று சரீரப் பிணைகள் மற்றும் ரூபா 50 ஆயிரம் பணம் ஆகிய பிணைகளுடன், வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டதோடு, கடவுச்சீட்டை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் மாத்தறை நீதவான் யுரேஷா டி சில்வா உத்தரவிட்டார்.
அத்துடன் ஒவ்வொரு மாதமும் காலை 9.00 – நண்பகல் 12.00 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில், FCID இற்கு ஆஜராகி கையெழுத்திடுமாறும் உத்தரவிடப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பில் ஏற்கனவே, பசில் ராஜபக்ஷவின் மைத்துனர் மற்றும் கட்டடக்கலைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here