ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் தலைவர் மொதியுர் ரஹ்மான் நிசாமிக்கு டாக்கா மத்தியச் சிறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானுடன் 1971ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச விடுதலைக்கான போரின்போது அவர் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களைப் புரிந்தார் எனத் தீர்ப்பளித்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
போர்க் குற்றங்கள் தொடர்பில் கடந்த 2013ஆம் ஆண்டுமுதல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள எதிர்கட்சிகளின் மூத்த தலைவர்களில் இவர் ஐந்தாவதாவார்.
இவ்வகையில் முன்னர் கட்சித் தலைவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு வன்முறையுடன் கூடிய போராட்டங்கள் வெடித்தன.
தனது மரண தண்டனை மறுபரிசீலை செய்யப்பட வேண்டும் என அவர் இறுதியாக சமர்ப்பித்த மனுவை, கடந்த திங்கள்கிழமை வங்கதேச உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் கடைசி முறையாக அவரது மனைவி உட்பட உறவினர்கள் அவரை சந்தித்தனர்.