யாழ் குடா குழுக்களை கைதுசெய்வதற்கு நீதிபதி இளஞ்செழியன் பணிப்பு!

0
361
jaffna-courtயாழ் குடாநாட்டில் வாள்வெட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடும் குழுக்களை கைது செய்வதற்கு அதிடிப்படையைக் களத்தில் இறக்குமாறு யாழ்ப்பாணம் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு நீதிபதி இளஞ்செழியன் பணிப்புரை பிறப்பித்துள்ளார்.
யாழ் குடாநாட்டில் அதிகரித்துள்ள வாள்வெட்டு மற்றும் கொள்ளைச்சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கு பிரதேச பொலிசாருக்கு உதவியாக விசேட அதிரடிப்படையைக் களத்தில் இறக்கி குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல்களைக் கைது செய்யுமாறு நீதிபதி பிரதி பொலிஸ் மா அதிபருக்கு நேரடியாகப் பணிப்புரை விடுத்துள்ளார்.
யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் கடந்த வாரம் ஆஜராகிய யாழ் பிரதி பொலிஸ் மா அதிபர் யாழ் குடாநாட்டில் குற்றச் செயலக்ளைக் கட்டுப்படுத்துவதற்குப் பொலிசார் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விபரித்திருந்தார்.
பொலிசார் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த நீதிபதி இளஞ்செழியன், குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள பிரதேசங்களாகிய அராலி, வட்டுக்கோட்டை, சுன்னாகம், கோப்பாய், மானிப்பாய் போன்ற இடங்களில் விசேட அதிரடிப்படையைக் களத்தில் இறக்கி, குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்களைக் கைது செய்வதற்கு விசேட தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்தந்தப் பிரதேச பொலிசாருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அறிவுறுத்தினார்.
குற்றச்செயல்கள் நிலைமைகள் குறித்து நீதிபதியிடம் விபரித்த யாழ்ப்பாணம் பிரதி பொலிஸ் மா அதிபர் ஏற்கனவே அதிரடிப்படை களத்தில் இறக்கப்பட்டு, சந்தேகத்திற்குரியவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். அத்துடன் மாலை 6 மணியில் இருந்து விசேட அதிரடிப்படையின் மோட்டார் சைக்கிள் அணியின் ரோந்து நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
இருப்பினும் குற்றச்செயல்கள் யாழ் குடாநாட்டில் அதிகரித்த வண்ணம் இருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, வாள்வெட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்காகக் கூடுதலாக விசேட அதிரடிப்படையை கடமையில் ஈடுபடுத்துமாறு பணிப்புதை விடுத்தார்.
இதனையடுத்து, உடனடியாகவே, விசேட அதிரடிப்படையின் பொலிஸ் அத்தியட்சகருடன் தொடர்பு கொண்ட யாழ் பிரதி பொலிஸ் மா அதிபர், குற்றச்செயல்கள் அதிகமாக இடம்பெறுகின்ற முக்கியமான இடங்களைச் சுட்டிக்காட்டி, ரோந்து நடவடிக்கைகளை அதிகரித்து, குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here