உந்துருளி மீது கன்டர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் கன்டர் வாகனத்தின் சில்லினுள் நசியுண்டு பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் கற்பிளானை கோப்பாய் மத்தியை சேர்ந்த சங்கரப்பிள்ளை கங்காதேவி (வயது 52 ) என்பவர் பரிதாபகரமாக உயிரிழந்ததுடன் அவரை ஏற்றி வந்த செல்வரத் தினம் கிரிசோ (வயது29) என்ற யுவதி சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
பலாலி வீதியால் யாழ்.நகர் நோக்கி உந்துருளியில் சென்ற இரு பெண்களை அரசடி வீதியூடாக நல்லூரை நோக்கி செல்ல முயன்ற கன்டர் வாகனம் கந்தர்மடம் சந்தி யில் வைத்து மோதியுள்ளது.
இந்த விபத்தில் உந்துருளியின் பின்னால் இருந்த பெண் நிலத்தில் விழுந்த தும் கன்டர் வாகனத்தின் பின் சில்லு அவரின் மேல் ஏறியதில் குறித்த பெண் சம்பவ இட த்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் கன்டர் சாரதியை கைது செய்ததுடன் பெண்ணின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.