கிளிநொச்சி பரந்தன் புகையிரத நிலையத்திற்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு இடம்பெற்ற தொடருந்து விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளர்.உயிரிழந்தவர் கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தை சேர்ந்த அனுசாந் வயது 24 என்பவர் என தெரிவிக்கப்படுகிறது .
தொலைபேசியில் உரையாடியவாறு புகையிரத கடவையை கடக்க முற்பட்ட வேளையே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.குறித்த நபர் ஒருமாத காலமாக பரந்தன் பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கி இருந்ததாகவும் அவரின் ஒரு காது கேட்கும் திறன் குறைவு எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்
உயிரிழந்தவரின் சடலம் யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த விபத்தை ஏற்படுத்திய புகையிரத்திலேயே கிளிநொச்சி புகையிரத நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக அங்கு வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.