வரும் ஒரு வார காலம் எவ்வித கொண்டாட்டங்களுக்கோ, பேரணிகளுக்கோ, வாகனப் பேரணிகளுக்கோ அனுமதி வழங்கப்பட மாட்டது என தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண இந்த ஒரு வார காலப் பகுதிக்குள் பட்டாசு வெடித்தல், வாண வேடிக்கை விடுதல் ஆகிய செயற்பாடுகள் ஊடாகவேனும் ஒருவருக்கு இடையூறுகள் விளைவிப்பின் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என சுட்டிக் காட்டினார்.
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று மாலை இடம்பெற்ற விஷேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்படி தெரிவித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண பெறுபேறுகள் வெளியிடப்படும் போது குழப்பங்களிலோ வன்முறைகளிலோ ஈடு படவேண்டாம் என பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்த தாவது,
7 ஆவது ஜனாதிபதி தேர்தலின் வாக்குப் பதிவுகள் நிறைவடைந்துள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் 69 ஆம் சரத்தின் கீழ் அடுத்துவரும் 7 நாட்கள் தேர் தலுக்குப் பின்னரான காலப்பகுதியாக பிர கடனப்படுத்தப்படுகின்றது.
இந் நிலையில் அந் நாட்களில் நாடளாவிய ரீதியில் பேரணிகள், நடைபவனிகள், வாக னப் பேரணிகள் என அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன.
இதனை மீறி யாரும் செயற்படுத்த முற்படக் கூடாது. அவ்வாறு மீறி செயற்படின் பொலிஸார் அவர்களின் அதிகாரங்களை பயன்படுத்தி அதனை நிறுத்த வேண்டி ஏற்படும்.
தேர்தல்கள் கடமை தொடர்பில் ஈடு படுத்தப்பட்ட 71100 பொலிஸாரும் தொடர்ந்தும் தேர்தலுக்கு பின்னரான காலப் பகுதியிலும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படுவர்.
பொலிஸாரின் கடமைகளுக்கு இடை யூறு விளைவித்து எவரேனும் தேர்தல் சட் டங்களை மீறி செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையாக செயற்படுவோம். அவர்கள் பொலிஸாருக்கு எதிராக முன் னெடுக்கும் குழப்பங்களுக்கு சமனான தும் எதிரானதுமான பலத்தை நாம் அவர்கள் மீது பிரயோகிப்போம்.
இந் நிலையில் குறித்த காலப்பகுதிக்குள் எவரும் குழப்பங்களிலோ வன்முறைகளிலோ ஈடுபடவேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
இதுவரை தேர்தலை அமைதியாக நடத்த வழங்கிய ஒத்துழைப்பை போன்றே தேர்தலுக்கு பின்னரான காலப்பகுதியிலும் ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகிறோம். என்றார்.