தமிழின அழிப்பு நாள் மே 18 இனை முன்னிட்டு, பிரான்சின் தலைநகர் பாரிசுக்கு அண்மையில் உள்ள நகரங்களில், சிறிலங்காவினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பு புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகின்றது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழீழ மக்கள் பேரவை மற்றும் ஒள்னே சுபுவா தமிழ்ச் சங்கம். ஆகியன இணைந்து கடந்த 05.05.2016 வியாழக்கிழமை ஒள்னே சுபுவா பகுதியில் முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 16.00 மணிவரை குறித்த கண்காட்சி இடம்பெற்றிருந்தது.
செயற்பாட்டாளர் கஜன் அவர்கள் கண்காட்சியை நேர்த்தியாக ஒழுங்கு படுத்தியிருந்தார்.
பெரும் எண்ணிக்கையான மக்கள் மேற்படி கண்காட்சியைப் பார்த்து எமது நாட்டில் இடம்பெற்ற கொடுமைகளை கண்டு அதிர்ந்து போயினர்.
குறித்த கண்காட்சி தொடர்ந்து பாரிசின் இதர நகரங்களிலும் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர்.
ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.