பிரான்சில் மூன்று நாட்கள் நடைபெறுகின்ற புலன்மொழி வளத்தேர்வு 2016

0
333

10-fr-600x330தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகம் நடாத்தும் புலன்மொழி வளத்தேர்வு 2016 இன்று சனிக்கிழமை ஆரம்பமாகின்றது.

பிரான்சில் பாரிஸ் மற்றும் ஸ்ரார்ஸ்பேர்க், நீஸ், போசோலே அடங்கலாக 26 நிலையங்களில் இத்தேர்வு இடம்பெறுகின்றது.
இத்தேர்வில் வளர்தமிழ் 1 தொடக்கம் வளர்தமிழ் 12 வரை மாணவர்கள் பங்கு பற்றுகின்றனர். மாணவர்களின் பேச்சுத் திறனை வளர்க்கும் முகமாக நடைபெறும் இப்புலன்மொழித்தேர்வானது கேட்டல்,பேசுதல்,வாசித்தல் என மூன்று பிரிவாக நடைபெறும்.

1.கேட்டல்
ஒலிவட்டு இருமுறை ஒலிக்கவிட்டபின் அதில் கேட்கப்பட்ட செய்தியிலிருந்து வினாக்கள் கேட்கப்படும் . (11,12 ம் ஆண்டு மாணவர்களுக்கு கேட்டல் பகுதி இல்லை )

2.வாசித்தல்
வகுப்பு நிலைகளிற்கேற்ப மணித்துளிகள் வழங்கப்படும் இவ்வாசிப்பில் பின்வருவன கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகும்.
1.மனதுக்குள் எழுத்துக் கூட்டி வாசித்தல்.
2.எழுத்துகளைப் பிழையற இனங்கண்டு சொற்களை சரியாக வாசித்தல்.
3.எழுத்தொலிகளைச் சரியாகப் பலுக்குதல்.
4.குறில், நெடில் வேறுபாடுகளை அறிந்து தெளிவாக வாசித்தல்.
5.நிறுத்தற்குறிகளைக் கவனத்தில் கொள்ளல்.

3.பேசுதல்
வளர் தமிழ் 1 தொடக்கம் ஆண்டு 5வரை பாடநூல் தலைப்புகள் சார்ந்த படங்களும்,சூழற்காட்சிப் படங்களும் வழங்கப்படும்.இவற்றுள் ஒன்றைத் தெரிவு செய்து ஐந்து மணித்துளிகள் பேசவேண்டும்.
ஆண்டு 6 தொடக்கம் ஆண்டு 12 வரை பாடநூல் தொடர்பான தலைப்புகள் ஐந்தும், பொது விடயங்கள் தொடர்பான ஐந்தும் எழுதப்பட்ட தாள்கள் (தலைப்புக்கள் மறைக்கப்பட்டு, படங்கள் வழங்கப்படமாட்டாது) மேசையில் வைக்கப்பட்டிருக்கும். இரு வகையான தலைப்புகளிலும் ஒவ்வொன்றை மாணவர் எடுத்து அவ்விரு தலைப்புகளிலும் விரும்பிய ஒன்றை மாணவரே தெரிவு செய்து அத்தலைப்பு தொடர்பாக பேச வேண்டும். மாணவருக்கு சில மணித்துளிகள் அணியம் செய்ய வழங்கப்படும். அணியம் செய்த பின்னர் தலைப்பு தொடர்பாக பேச வேண்டும்..தமிழ்மொழியிலேயே தலைப்புத் தொடர்பாகப் பேசப்படல் வேண்டும்.

வளர்தமிழ் 6, 7
1.கூறப்படுகின்ற சொல்லியங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாக இருத்தல் வேண்டும் .
2.சொல்லிய உறுப்புகள், சொல்வளங்கள் கவனிக்கப்படல் வேண்டும் .

. வளர்தமிழ் 8, 9, 10
1.தலைப்புக்குரிய விடயத்தில் நின்று பேசுதல் வேண்டும் .
2.தொடர்ச்சியாகப் பேசுதல் வேண்டும்
3.பலுக்குதல், தெளிவு, தொனி கவனிக்கப்படல் வேண்டும் .

வளர்தமிழ் 11, 12
1.தலைப்புக்குரிய விடயத்தில் நின்று பேசுதல் வேண்டும் .
2.தொடர்ச்சியாகப் பேசுதல் வேண்டும்
3.பலுக்குதல், தெளிவு, தொனி கவனிக்கப்படல் வேண்டும் .
4.சொல்வளங்கள் வளர்தமிழ் 11, 12க்கு ஏற்றதாக இருத்தல் வேண்டும்.

பள்ளிகளில் கல்வி கற்கும் மாணவர்கள்
தங்கள் பள்ளி நிர்வாகியுடன் தொடர்பு கொள்ளவும்.

தனியாக விண்ணப்பம் செய்த மாணவர்கள்
தேர்வு நடைபெறும் இடம்:
MAISON DE QUARTIER “VIGNES BLANCHES”
avenue Anna de Noailles
95200 Sarcelles
Les Cholettes

தேர்வு நடைபெறும் நாட்கள்:
07/05/2016 சனிக்கிழமை
08/05/2016 ஞாயிற்றுக்கிழமை
15/05/2016 ஞாயிற்றுக்கிழமை

 

ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here