தேர்த்திருவிழாவில் தண்ணீர் பந்தலுக்கு மின்சார இணைப்பை பெற முயன்ற குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் வியாழக்கிழமை காலை 8 மணியளவில் சுன்னாகம் கதிரைமலை சிவன் கோயில் பகுதியில் இடம்பெறுள்ளது. மரணமானவர் கோயிலில் நடைபெறும் தேர்த்திருவிழாவில் தண்ணீர் பந்தலுக்காக மின்சார இணைப்பு ஒன்றை பெற முயற்சித்துள்ளார்.
இதன் போது அங்கு நிலத்தில் தண்ணீர் காணபட்டுள்ளது, இதனை கவனிக்காத குடும்பஸ்தர் மின் இணைப்பை பெற முயன்ற போது தண்ணீர் ஊடாக மின்சாரம் கடத்தப்பட்டு மின்சாரம் தாக்கி அவ்விடத்தில் உயிரிழந்தார்.
தண்ணீர் ஊடாக மின்சாரம் கடத்தப்ப ட்டமையால் இவருடன் சேர்த்து 6 பேருக்கு மின்சாரம் தாக்கியதாக நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டனர்.இவ்வாறு மரணமானவர் அளவெட்டி வடக்கைச் சேர்ந்த தெ.சொர்ணகுமார் (வயது-38) என்கின்ற ஒரு பிள்ளையின் தந்தையாவார்.
சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப் பளை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு பின்னர் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற் றப்பட்டுள்ளது.ஆலய தேர்த்திருவிழாவின் போது ஏற்பட்டிருந்த மேற்படி விபத்துச் சம்பவத்தினால் ஆலயத்துக்கு வந்திருந்த பக்தர்கள் பலரும் மனத்துயரமடைந்த நிலையில் காணப்பட்டமையை அவதானிக்க முடிந்தது.