
சென்னையில் இருந்து, திருவனந்தபுரதிற்கு திருவனந்தபுரம் மெயில் (12623) சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, பட்டாபிராம் ரயில் நிலையம் சென்று கொண்டு இருந்தது.
அப்போது, மின்சார ரயில் வந்துள்ளது. இரு ரயில்களும் ஒரு ரயில் தண்டவாளத்தில் வந்ததால்,இரு ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 7 பயணிகள் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த பயணிகளை அருகில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், ரயில் விபத்தில் இருந்து மீட்பு பணிகளை அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். இந்த விபத்து காரணமாக, சென்னை – அரக்கோணம் வழியாக செல்லும் ரயில் சேவை முற்றிலும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.