குளியல் அறையில் வழுக்கி விழுந்ததில் பலமான காயத்திற்குள்ளான குடும்பஸ்தர் ஒருவர் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் நேற்று காலை 7.00 மணியளவில் கே.கே.எஸ்வீதி இணுவில் பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.
இதில் அதே இடத்தினைச் சேர்ந்த குடும்பஸ்தரான பஞ்சாட்சரம் சிறிவரதன் (வயது 58) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்.சடலமானது நேற்று காலை 7 மணியளவில் பிரேதப்பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப் பட்டு பிரேதப் பரிசோதனையின் பின்னர் நேற்று இரவு 8 மணியளவில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.