இரணைமடு நீரை யாழ். குடாவுக்கு கொண்டு செல்வதை தவிர்க்க முடியாது: ரவூப் ஹக்கீம்!

0
166

5d7dcolpageஇரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டு செல்லப்படுவது தவிர்க்க முடியாததெனத் தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், தீர்மானங்களை எடுக்கின்றபோது விவசாயிகளின் அச்சங்களை போக்க நடவடிக்கைகள் எடுப்பது அவசியம் எனவும் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நேற்று வட மாகாண குடிநீர்திட்டம் தொடர்பிலான உயர் மட்ட கலந்துரையாடல் நடைபெற்றது.இதன் பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பதிலளித்த அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது:

யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் திட்டத்திற்கு மாற்றுத் திட்டங்கள் இருக்கின்ற போதும் இரணைமடுவில் இருந்தும் நீர் கொண்டு செல்லப்படும். ஆனால் அதற்கு முன்னதாக மாவட்ட

விவசாயிகளின் அச்சங்கள் நிவர்த்தி செய்யப்படுவதோடு அவர்களுக்கான காப்பீடு தொடர்பிலும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும் 2006 ஆம் ஆண்டிலிருந்தே இரணைமடு யாழ்ப்பாணம் குடிநீர் திட்டம் சர்சைக்குரியதாக இருந்து வருகிறது. குடிநீர் பிரச்சினை ஒரு மனிதாபிமான பிரச்சினை. இதில் அரசியல் கலப்பது நியாமற்றது.

எனவே கிளிநொச்சி விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் இரணை மடு மேலதிக நீரை யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்வது தொடர்பில் ஆராயப்படுகுறது.

இரணைமடுவில் மேலதிகமாக சேமிக்கப்படுகின்ற நீரில் அரைவாசி விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் அந்த வகையில் இத்திட்டம் குறித்து விவசாயிகள் பீதியடைய தேவையில்லை.

சுண்ணாகம் நிலத்தடி நீரில் எண்ணெய் கசிவுகள் கலந்துள்ளது. எனவே அந்த நீர் குடிப்பதற்கு உகந்தது அல்ல.

எனினும் வடக்கு மாகாண சபையின் குழுவின் ஆய்வின்படி அவ்வாறு எண்ணெய் கசிவுகள் நீரில் கலக்கவில்லை என்று கூறப்படுகிறது. எமது குழுவின் ஆய்வறிக்கையில் கசிவுகள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு குழப்பகரமான நிலைமையாகும். இது தொடர்பில் மேலதிகமாக குழுக்களை அமைத்து ஆராயவேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here