பிரான்ஸ் பத்திரிகை அலுவலக தாக்குதல்: தீவிரவாதி சரணடைவு!

0
275

france_attack_004பிரான்ஸ் பத்திரிகை அலுவலக தாக்குதலில் ஈடுபட்ட மூன்று தீவிரவாதிகளில் ஒருவர் சரணடைந்துள்ளார்.

பிரான்சின் தலைநகர் பாரிசில் உள்ள சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தில் நேற்று நுழைந்த 3 தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 கார்ட்டூனிஸ்டுகளையும், 5 நிருபர்கள் மற்றும் 2 பொலிசாரை கொலை செய்துள்ளனர்.

இக் கொடூர தாக்குதலில் ஈடுபட்ட மூன்று தீவிரவாதிகளில் ஒருவர் சரணடைந்துள்ளார், அவரது பெயர் ஹமித் மொராத்(வயது 18).

மற்ற இருவரும் சகோதரர்கள் என்று தெரியவந்துள்ளது. அவர்களது பெயர் சைத் கெளச்சி(வயது 34), செரீப் கெளச்சி(வயது 32).

தொடர்ந்து தலைமறைவாக உள்ள இவர்களது படங்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

சார்லி ஹெப்டோ பத்திரிக்கை வழக்கமாகவே எல்லா மதங்களையும் கிண்டல் செய்து செய்தி, கார்ட்டூன்கள் வெளியிட்டு வந்தது.

கடந்த 2011ம் ஆண்டு நபிகள் நாயகத்தால் எடிட் செய்யப்பட்ட எடிசன் என்று கூறி இந்த பத்திரிக்கை தனது இதழை வெளியிட்டது.

இதையடுத்து இதன் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதியின் கேலிச் சித்திரத்தை சமீபத்தில் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது,  இதுவே நேற்றைய தாக்குதலுக்கு காரணம் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here