புலம் பெயர் நாடுகளில் தாய்மொழியாம் தமிழ்மொழிக் கல்வியைமேம்படுத்தி வருகின்ற தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் நடாத்தப்பட்ட இலக்கியமாணி பட்டயக்கல்வி முதலாம் ஆண்டுத் தேர்வு 30.04.2016 அன்று நோர்வே, இத்தாலி, டென்மார்க்,நெதர்லாந்து, பிரித்தானியா ஆகிய நாடுகளில் சிறப்பாகநடைபெற்றது.
தாய்மொழியைக் கற்பிக்கின்ற ஆசிரியர்களின்மொழிவளத்தை அதிகரிப்பதற்கும் வளர்தமிழ் நூல்களில் உள்ளபாடவிதானங்ளை தெளிவாக விளங்கிக் கொள்வதற்கும்சிலப்பதிகாரம், தமிழ்மொழி, பட்டினப்பாலை, இலக்கியநயம்,நாமார்க்கும்குடியல்லோம் (புதினம்) இலக்கணம்,ஒளவையும்அருந்தமிழும், திருக்குறளும் வாழ்வியலும் ஆகியநூல்களைக், கற்று அன்று இலக்கியமாணி பட்டயக் கல்வித் தேர்வை எழுதினார்கள்.
மேற்படி பாடவிதானங்ளை நிறைவாகக் கற்ற 260 தேர்வுநாடிகள் இத் தேர்வை எழுதினார்கள் என்பது பெருமைக்குரியவிடயமாகும்.