வாக்களித்துவிட்டு, வாக்களிப்பு நிலையத்திலிருந்து வெளியேறிய வாக்காளர் ஒருவர் வாக்குச்சாவடிக்கு அண்மையில் உள்ள மரமொன்றில் ஏறியமர்ந்து கொண்டுள்ளார்.
தான் வாக்களித்து விட்டதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த தேர்தலில் வெற்றியீட்டாவிட்டால் தான் மரத்திலிருந்து இறங்க போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் காலி, வந்துரம்ப எனுமிடத்திலேயே இடம்பெற்றுள்ளது.
அதே போல் மேலும் ஒரு தேர்தல் சம்பவம்;-
உடுகமவில் முச்சக்கரவண்டியொன்றை சோதனைக்கு உட்படுத்திய போது அதில் வாக்குச்சீட்டுகள் போன்ற ஆவணங்கள் சிலவற்றை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவை எவ்வாறான ஆவணங்கள் என்பது தொடர்பில் கண்டறிவதற்கு தேர்தல்கள் ஆணையாளரின் உதவியை நாடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.