ஆந்திரமாநிலத்தில் கோர விபத்தால் 20 பேர் மரணம்!

0
160

4653இந்தியாவின் ஆந்திரமாநிலத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற பேருந்து  விபத்தில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்ட த்தில் மடக்க சிறா என்ற இடம் உள்ளது. இங்கிருந்து போதுகுண் டாவுக்கு நேற்று  காலை 8.30 மணியளவில் அரசு பேருந்து  ஒன்று புறப்பட்டது.

இது கிராமப்புற மக்களுக்காக இயக்கப்படம்  60இற்க்கும் மேற் பட்ட பயணிகள் இருந்தனர்.

இதில் பெரும்பாலானோர் பாடசாலை மாணவர்கள்.பேருந்து மடக்கசிறா ஊரை கடந்து செல்லும்போது, பேருந்து ஒரு வளைவில் திரும்பும் போது  கட்டுப் பாட்டை இழந்து 60 அடி பள் ளத்தில் உருண்டு விழுந்து கவி ழ்ந்தது.எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தில் பேருந்து முழுவதும் நொறுங்கி சிதைந்தது. பேருந்தில் இருந்தவர்கள் அலறி துடித்தனர்.

பெரும்பாலானோர் இடிபாடுகளி டையே சிக்கினார்கள். இருந்த 20 பேர் சம்பவ இடத்தில் உடல் நசு ங்கிபரிதாபமாக உயிர் இழந்தனர்.

பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அருகில்  உள்ள கிராம மக்கள் அங்கு ஓடி வந்து, உயிருக்கு போராடியவர் களை மீட்டனர்.

பொலிஸாருக்கு தகவல் கொடு க்கப்பட்டது. மிக பலத்த காயம் அடைந்தவர்கள் பெங்கர் வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

மற்றவர்கள் இந்துபுரம் அரசு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இதில் பலரின்  நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

விபத்தில் இறந்தவர்களுக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.

காயம் அடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட் டுள்ளது. ஆந்திர கல்வி அமைச்சர் ஸ்ரீனிவாஸ், இந்த விபத்தில் 12 பேர் இறந்து இருப்பது உறுதி செய் யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரகுநாத ரெட்டி சம்பவ இடத்துக்கு ஹெலியில் சென்று பார்வையிட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here