அரை நூற்றாண்டின் பின் மீண்டும் சந்தித்துக்கொண்ட நால்வர்!

0
148

ChHxpvDUcAAeTjq.jpg-largeவியட்நாம் போரில் பங்கேற்ற 4 முன்னாள் இராணுவ வீரர்கள் அமெரிக்காவின் ப்ளோரிடா கடற்கரையில் ஒன்று கூடினார்கள்.

50 ஆண்டுகளுக்கு (1966) முன்பு அதே கடற்கரையில் சர்ஃப் போட் வைத்துக்கொண்டு, நால்வரும் புகைப்படம் எடுத்திருந்தனர். அந்தப் புகைப்படத்தில் இருப்பது போலவே நால்வரும் நின்று, மீண்டும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

போருக்கு முதல் நாள். நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். அப்போது எடுத்த புகைப்படம் இது. அதற்குப் பிறகு 11 ஆண்டுகள் வியட்நாம் காடுகளில் கடுமையான வாழ்க்கை. தினமும் 20 மைல் தூரம் காட்டுக்குள் நடக்க வேண்டும். நிலத்தைத் தோண்டி, அதற்குள் உறங்க வேண்டும். இந்தப் புகைப்படம் எடுத்த பிறகு நாங்கள் நால்வரும் சந்திக்கவே இல்லை. 50 ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுதுதான் இந்த வாய்ப்புக் கிடைத்திருக்கிறது

என நால்வரில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

போரில் இருந்து திரும்பிய பிறகு நாங்கள் நால்வரும் கட்டிட வேலை, வீட்டுக் காவல், வங்கி என்று பல வேலைகளுக்குச் சென்றுவிட்டோம். திருமணம் செய்து, குழந்தை குடும்பம் என்று வாழ்ந்து முடித்துவிட்டோம். 5 ஆண்டுகளுக்கு முன்புதான் இணையத்தின் மூலம் ஒவ்வொருவராக மீண்டும் அறிமுகமானோம். நேரில் சந்திக்க 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. இளைஞர்களாக சந்தித்த நாங்கள், 70 வயதுகளில் முதியவர்களாகச் சந்தித்திருக்கிறோம். போருக்கு முன்னால் மகிழ்ச்சியாக எடுத்த புகைப்படத்தை மீண்டும் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மறு உருவாக்கம் செய்ய முடியும் என்று நாங்கள் நினைக்கவே இல்லை. ஆனால் நடந்திருக்கிறது

என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here