மரண சான்றிதழ் வழங்குவதா பரணகம குழுவின் நோக்கம்? நாட்கள் கடத்தப்படுவதாக உறவுகள் விசனம்!

0
130

9932காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் நாட்களை கடத்தும் நோக்கிலும் மரணச்சான்றிதழை வழங்கி விடுவதிலுமே அதீத அக்கறை காண்பிப்பதாக கவலையுடன் தெரிவித்த காணாமல் போனோரது உறவினர்கள், நட்டஈட்டையும் மரணச் சான்றிதழையும் மட்டுமா இந்த ஆணைக்குழுவினரால் கண்டறிந்து தரமுடியும் எனவும் விசனத்துடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வடக்கு கிழக்கில் காணாமல் போனவர் கள் தொடர்பாக விசாரணைகளை மேற் கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழு வின் 16ஆவது அமர்வு 4 நாட்களாக கிளி நொச்சி மாவட்டத்தில் நடைபெற்று நேற்றைய தினத்துடன் நிறைவடைந்திருந்தது.
இந்த நிலையில் இதுவரை காலமும்  ஜனாதிபதி ஆணைக்குழுவால் மேற்கொள்ள ப்பட்டு வந்த விசாரணைகளில் பொதுமக்க ளுக்கு இருக்கும் நம்பிக்கை முற்று முழுதாக குறைவடைந்து வருகின்றமையை அவர்க ளது சாட்சியமளிப்புக்கள் நிரூபித்துள்ளன.
விசாரணைகள் மட்டுமே மேற்கொள்ளப் பட்டு வருகின்றதே தவிர ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப் பட்டதாக தெரியவில்லை எனவும் சாட்சிய மளித்த உறவுகள் விசனம் தெரிவித்தனர்.
இந்த ஆணைக்குழு ஆரம்பித்த காலத் தில் பாதிக்கப்பட்ட மக்கள் மிகுந்த நம்பிக்கை யுடனும் ஆவலுடனும் சென்று தமது சாட்சிய ங்களை பதிவு செய்தனர். தமது உறவுகள் மீண்டும் கிடைக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகளவிலேயே மக்களிடம் காணப்பட்டிருந்தது.
ஆனால் மக்கள் தற்போது மிகவும் மனம் சோர்ந்த நிலையிலேயே தமது சாட்சியங்களை பதிவு செய்ய செல்கிறார்கள். கடிதம் வந்ததால் போகிறோம் என்ற கட்டாயத்தில் ஆணை க்குழுவிடம் சாட்சியமளிக்க செல்கிறார்கள்.
ஆணைக்குழு முழு மூச்சாக மரணச் சான்றிதழ் மற்றும் நிவாரணம் வழங்குவதி லேயே ஆவலாக உள்ளது என குற்றம் சாட்டி யுள்ள சாட்சியமளித்த மக்கள், இவர்களால் எம் உறவுகளைத் தேடி கண்டறிய முடியாதா எனவும் விரக்தியுடனும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
அத்துடன் சிலமொழி பெயர்ப்பாளர்கள் துறை சார்ந்த வல்லுனர்களாக இல்லை. உணர்வுகளை சரியாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில் விசாரணை செய்பவர்களும் இல்லை. ஆணைக்குழுவில் உள்ள அதிகாரி கள் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்ப தற்கு முயற்சி செய்வதாக கூறினாலும் இது வரை அதற்குரிய நடவடிக்கைகள் மேற் கொண்டதாக தெரியவில்லை எனவும் பாரிய அளவில் குறைகள் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்களைக் கடத்துவதற்காகவே குறித்த அமர்வுகள் நடைபெற்று வருகின்றன என்று சந்தேகிக்கப்படவைக்கின்ற நிலையில் இவ ர்களின் செயற்பாடுகள் அமைந்துள்ளன என வும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக காணாமல் போன வரு டைய தாய் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்
2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத் தின் போது எனது மகன் இராணுவத்திடம் சரணடைந்தார். 2013ஆம் ஆண்டு காணா மல் போனவர்களை கண்டறியும் ஆணைக் குழுவில் முறைப்பாடுகளை பதிவு செய்து உறவுகளை கண்டு பிடிக்க முடியும் எனஅறி விக்கப்பட்டபோது உடனடியாக எனது மக னின் விபரங்களை ஆணைக்குழுவுக்கு அனுப்பியிருந்தேன். அத்துடன் பல்வேறுபட்ட அமைப்புக்களிலும் பதிவுகளைமேற் கொண் டிருந்தேன். ஆனால் முதற்கட்டமாக இம் முறைதான் என்னை விசாரணைக்காக அழைத்துள்ளார்கள்.
ஆனால் 2010ஆம் ஆண்டில் இருந்து 2015 ஆம் ஆண்டுவரை என்னை பலர் விசார ணை செய்து கொண்டே இருந்தார்கள் அந்த வகையில் எனது மகன் உயிருடன் உள்ளார் என்பது உறுதி.
இருக்கிறார்களா? இல்லயா? என்ற உரிய பதிலை எமக்குதர வேண்டும். அதன் பின்னர் தான் மரணசான்றிதழ் நஷ்ட ஈடுபற்றிபேச வேண்டும். ஆனால் அவர்கள் வெந்தபுண் ணில் வேலைபாய்ச்சுவது போல் ஆரம்பத் திலேயே தேடவேண்டுமா? எனக் கேட்கிறார் கள். எம்மால் சாட்சிசொல்ல முடியவில்லை.
தற்போதும் பரவலாக காரணம் தெரியா மல் கைதுகள் நடைபெறுகின்றன. இவ்வாறு சாட்சி சொல்லும் நாங்களும் இனிவரும் காலத்தில் கைது செய்யப்படலாம். ஆனால் எமது உறவுகள் கிடைக்கும் வரை நாங்கள் தேடிக்கொண்டே இருப்போம்.
மனநிலை பாதிக்கப்பட்டு தெரு நாய்கள் போல அலைந்து திரிகிறோம். காலக்கெடு முடிந்த பின்னரும் எம் உறவுகளை தேடிதரு வதாக வந்துள்ளார்கள் அதை புறக்கணிக்க கூடாது என்பதற்காக சாட்சியம் அளிக்கவருகி றோம்.
இந்த ஆணைக்குழு மீண்டும் எம்மை ஏமாற்றும் செயலை செய்ய மாட்டார்கள் என்று எமக்கு  நம்பிக்கைவரும் வகையில் காணா மல் போனஒருவரையாவது கண்டு பிடித்து கொடுக்க வேண்டும். இல்லை என்றால் இத் தோடே இவர்களின் ஏமாற்று வேலையை நிறுத்திக் கொள்ளவேண்டும் என தெரிவி த்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here