சிவகரன் கைது செய்யப்பட காரணம் முக நூலில் புலித் தொடர்பு!

0
128
9923இலங்கை தமிழரசு கட்சியின் மன்னார் மாவட்ட இளைஞர் அணித்தலைவரும், புதியவன் பத்திரிகை ஆசிரியருமான எஸ்.சி கரன் முகநூலின் (பேஸ்புக்) ஊடாக வெளி நாடுகளில் உள்ள புலிகளோடு தொடர்பு வைத்திருந்தார் என்ற சந்தேகத்திலேயே பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக காரணம் கூறப்பட்ட நிலையில் அவருக்கு நேற்று கடும் நிபந்தனைகளுடன் பிணை வழங்
கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் மன்னா ரில் வைத்து பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப் பட்ட சிவகரன் நேற்றையதினம் சாவகச்சேரி நீதிமன்றில் நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரம் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்தார்.
இதன் போது பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுக்கான காரணத்தை மன்றில் தெரிவித்துள்ளனர்.
மறவன்புலோவில் தற்கொலை அங்கி மீட்கப்பட்ட சம்பவத்தோடு வெளிநாட்டில் உள்ள புலிகள் சிலர் சம்பந்தப்பட்டுள்ளனர்.
இவர்களோடு சிவகரனும் பேஸ் புக் மற்றும் வேறு வழிகளிலும் சம்பந்தப்பட்டிருப்பதனாலேயே கைது செய்யப்பட்டார் என ரி.ஐ.டி.காரணம் கூறியுள்ளது. இந்நிலையிலேயே சிவகரன் வெளிநாடு செல்வதற்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கையொப்பமிட வேண்டும் என்ற பிணை நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றையதினம் விடுதலையாகிய சிவகரன் நீதிமன்றத்துக்கு வெளியே வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில்;,
இலங்கை அரசிற்கு எதிராகவும் அதன் புலனாய்வு பிரிவிற்கும் எதிராகவும் அறிக்கைகள் மற்றும் பிரசாரங்களை மேற்கொண்டதனாலேயே தான் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்த சிவகரன் விசாரணை குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நேற்றையதினம் சாவகச்சேரி நீதிமன்றில் நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரம் முன் னிலையில்  பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால் ஆஜர்ப்படுத்தப்பட்ட சிவகரனை ரூபாய் ஒரு இலட்சம் பெறுமதியான இரண்டு ஆட் பிணை யிலும் செல்ல அனுமதித்ததோடு,
பிணைக்கால பகுதியில் வெளி நாடு செல்ல முடியாது எனவும் அவ்வாறு செல்வதானால் பயங்கர வாத குற்றத்தடுப்பு பிரிவினரின் அனுமதி பெறப்படல் வேண்டும் எனவும் பிணை நிபந்தனை கடுமையாக விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த வழக்கு மீண்டும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி எடுத்துக் கொள்ளப் படவுள்ளது.
நேற்றைய வழக்கில் சிவகரன் சார்பில் சட்டத்தரணி கேசவன் சயந்தன் மன்றில் தோன்றி பிணைவிண் ணப்பம் செய்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here