பிரான்சில் இடம்பெற்ற அன்னை பூபதி 28 ஆம் ஆண்டு சித்திரைமாத மாவீரர் நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்க நிகழ்வும்!  

0
388
தமிழீழத் தாயவள் அன்னை பூபதி அவர்களின் 28 ஆம் ஆண்டு நினைவேந்தலும்  நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்க நிகழ்வு மற்றும் சித்திரை மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கும் பிரான்சில் இயற்கை எய்திய வெள்ளைத்தாய் பவுலா லுயிய் வியோலெத் (Mme. Paula Lugi Violet)   அவர்களது முதலாம் ஆண்டு நிகழ்வும்  பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு  தமிழ் பெண்கள் அமைப்பு , ஓள்னேசுபுவா தமிழ் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் கடந்த (23.04.2015) சனிக்கிழமை பிரான்ஸ் ஓள்னே சுபா பகுதியில் மிக உணர்வுபூர்வமாக இடம்பெற்றன.
பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில்  ஈகைச்சுடரினை யாழ்.கொக்குவில் பகுதியில் வீரச்சாவடைந்த கப்படன் மணிமகனின் தந்தை ஏற்றிவைக்க பொதுச்சுடரை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் திரு. மகேஸ் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தியாகி அன்னை பூபதி அம்மாவின் திருஉருவப்படத்திற்கான சுடரை கொக்குவில் பகுதியில் வீரச்சாவடைந்த கப்டன் மணிமகனின் தாயார் ஏற்றிவைக்க, சித்திரை மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கான சுடரை 1988 ஆம் ஆண்டு ஓமந்தைப் பகுதியில் வீரகாவியமான கப்டன் ரூபனின் சகோதரி  ஏற்றிவைத்தார்.
நாட்டுப்பற்றாளர் பிரான்சிஸ் (2011) அவர்களின் திரு உருவப்படத்திற்கு திருமதி பிரான்சிஸ் அவர்களும்,  நாட்டுப்பற்றாளர் ஜெயசோதி (2014) அவர்களின் திரு உருவப்படத்திற்கு 2008 இல் வீரச் சாவடைந்த கப்படன் சூரியத்தேவனின் சகோதரனும், நாட்டுப்பற்றாளர் சிவராஜா (2015) அவர்களின் திரு உருவப்படத்திற்கு திருமதி சிவராஜா அவர்களும், இனப்பற்றாளர் பவுலா லுயிய் வியோலெத் (2015) அவர்களின் திரு உருவப்படத்திற்கு நாட்டுப்பற்றாளர் பிரான்சிஸ் அவர்களின் மகளும் ஏற்றிவைத்தனர்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து மலர்வணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன. செவ்ரோன் தமிழ்ச்சோலை, செல் தமிழ்ச்சோலை  மாணவிகளின் நடனம் மற்றும் அங்கையற்கண்ணி இசைக்குழுவினரின் தாயகப் பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்தன.
பிரான்சு தமிழ்பெண்கள் அமைப்பினரால் ஆரம்பிக்கப்பட்டு, தவிர்க்கமுடியாத காரணங்களினால் இடைநிறுத்தப்பட்டிருந்த அங்கையற்கண்ணி இசைக்குழு மீண்டும் இந்நிகழ்வில்  ஆரம்பிக்கப்பட்டமை சிறப்பம்சமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
நிசாங்கனி, ஹிரணி, கரிகரணி, திரானிகா, சோனா, சூரியா, நிதர்சன் ஆகியோர் சிறப்பாகப் பாடல்களை வழங்கியிருந்தனர்.
பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பைச் சேர்ந்த திருமதி யசோ அவர்களின் கவிதை, பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பு உறுப்பினரின் பேச்சு என்பன  இடம்பெற்றன.
சிறப்புரையாக பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் திரு.ஜெகன் அவர்கள் ஆற்றியிருந்தார்.
2016 வன்னிமயில் போட்டியில் பங்குபற்றி பரிசுபெறத் தவறிய மாணவிகளுக்கு ஒள்னே சுபுவா தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. விஸ்வநாதன் அவர்களினால் வழங்கப்பட்டது.
நிகழ்வின் நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்தது. தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றன.
ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு
IMG_9922 IMG_9925 IMG_9926 IMG_9941 IMG_9950 IMG_9961 IMG_9965 IMG_9969 IMG_9970

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here