மே 1 தொழிலாளர் தினம்.
முதலாளி வர்க்கத்தின் சுரண்டல்களுக்கு எதிராகவும், அனைத்து ஆதிக்கசக்திகளினதும், சர்வாதிகாரசக்திகளினதும் அடக்குமுறைகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகவும் கிளர்ந்தெழுந்த தொழிலாளர்வர்க்கம், வர்க்கப்பாகுபாடற்ற, சமத்துவ சமதர்ம சமுதாயத்தை உருவாக்கும் நோக்கிலேயே தொழிலாளர் போராட்டம் நடைபெற்றது.
அரசியல்வாதிகளின் மீதும் நம்பிக்கை இழந்த நிலையில் தமிழீழ கொள்கையுடன் புறப்பட்ட இளைஜர்களின் சிந்தனையை – தந்தை செல்வா வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மூலம் அதற்குரிய அரசியல் வலுமையையும் மக்கள் அங்கீகாரத்தை பெற்றுக்கொடுத்து போராட்டதிற்க்கான மக்கள் அங்கீகாரத்தையும் கொடுத்தது. அந்த தீர்மானத்தை நடைமுறை தமிழீழ அரசாக உருவாக்கி, சர்வதேச ராஜதந்திரிகள் வன்னி நோக்கி படையெடுத்த காலமும் நடைமுறையில் இருந்தது.
தமிழீழத்தில் இடைக்கால அரசொன்றை நடைமுறையில் நடத்திக்காட்டி, சர்வதேசத்திக்கு, அனைத்து மக்களும் விடுதலையும் சமத்துவ உரிமைகளும் பெற்ற ஒரு முன்னோடியான முற்போக்கான அரசை தமிழீழ விடுதலை புலிகள் எமது தேசியத் தலைவர் தலைமையில் நடத்திக்காட்டினார்கள்.
இந்த முற்போக்கு கருத்துகளை கொண்ட அரசையே சர்வதேசம் அழித்து, ஒரு இன மக்களின் விடுதலையை அழித்து நிற்கிறது..
.இந்த போரரட்ட வழியில் வந்த நாங்கள் இந்த மே தினப்போராட்டதில் எமது தேசிய கொடியை ஏந்தி, நாம் இழந்த விடுதலை பெற தமிழீழ அரசின் அடையாளத்துடன், தமிழீழத் தேசியத்தலைவர், பின் அணி சேருவோம் வாருங்கள்.மீண்டும் இந்த முற்போக்கான அரசை நிலைநாட்ட அணிவகுத்து செல்வோம்.
பிரான்சு வாழ் தமிழர்கள் மே 1ஆம் திகதி Place de la Bastille என்னும் இடத்தில் மாலை 1 மணிக்கு எமது தேசிய சின்னங்கள், தேசியக்கொடியை உயர்த்தி பிடித்து சர்வதேச தொழிலாளர் தினத்தில் எமது அடையாளத்தையும் பதிக்கும் முகமாக,தமிழ் மக்கள் தெருக்களில் இறங்கவேண்டும்.
– தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு