அரசாங்கம் தமிழர்களை தம்மிடம் கையேந்த வைக்கிறது : சிறிதரன் குற்றச்சாட்டு

0
354
sritharan mp479கிளிநொச்சி மாவட்டத்தில் 40 சதவீதமான காணிகள் இராணுவம் தம் வசம் வைத்துள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் மெய்ப்பாதுகாவலர் ஒருவரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சி அரசாங்க அலுவலகத்திற்கு சொந்தமான காணியை 57 ஆவது படைப்பிரிவினர் தம்வசப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு, பழைய மாவட்ட செயலகத்திற்கு அருகிலுள்ள பொதுமக்களுக்கு சொந்தமான காணி மற்றும்,கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு அருகிலும் உள்ள ஆரம்பக்கல்வி பாடசாலைக்கு சொந்தமான காணிஆகியவை இராணுவத்திடம் உள்ளதாக அவர் கூறினார். இவ்வாறு மலையாளபுரம், உருத்திரபுரம். பரந்தன், பரந்தன் இரசாயண தொழிற்சாலை போன்ற மக்களுக்கு பயன் தரக்கூடிய இடங்களை இராணுவம் தம்வசப்படுத்தி வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த 1990 ஆம் ஆண்டு யுத்தத்தின்போது இடம்பெயர்ந்த இரணைமடு மக்கள் இரண்டு பரப்பு காணிகளில் தற்காலிக வீடுகளை அமைத்து பல்வேறு பிரச்சினைகளுடன் வாழ்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.கடல்வளம் நிறைந்த இரணைமடு பிரதேசத்தில் அந்த பிரதேச மக்கள் கடற்தொழிலில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், தென்பகுதி மீனவர்கள் குறித்த பகுதியில் உள்ள கடல்வளத்தை சுரண்டுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here