பிரான்ஸ் நாட்டு தேசிய கீதத்தை எகிப்து நாட்டு ராணுவ இசையமைப்பாளர்கள் அவமதித்துள்ள சம்பவத்திற்கு பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதியான பிராங்கோயிஸ் ஹாலண்டே 2 நாள் அரசு பயணமாக எகிப்து நாட்டிற்கு சென்றுள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையே ஆயுத ஒப்பந்தம் செய்துக் கொள்ள நேற்று முன்தினம் எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் உள்ள விமான நிலையத்தில் வந்து இறங்கிய ஜனாதிபதியை எகிப்து நாட்டு ஜனாதிபதியான Abdel Fattah al-Sisi வரவேற்றார்.
பின்னர், இருவரும் ஒன்று சேர்ந்து நின்ற போது பிரான்ஸ் நாட்டு தேசிய கீதத்தை எகிப்து நாட்டு ராணுவ இசையமைப்பாளர்கள் வாசித்துள்ளனர்.
உலகளவில் பிரபலம் வாய்ந்த La Marseilllaise என்ற பிரான்ஸ் தேசிய கீதத்தை இசையுடன் பாடியபோது, ஜனாதிபதி ஹாலண்டேவின் முகம் சுருங்கியுள்ளது.
இதற்கு காரணம் பிரான்ஸ் தேசிய கீதத்தை அவர்கள் தவறாகவும், அவமதிக்கும் விதத்திலும் பாடியதே அதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
இசையும் பாடலும் ஒன்று இணையாமல், சாதாரண பாடலைப் போல் முக்கியத்துவம் அளிக்காமல் பாடியுள்ளது தற்போது பிரான்ஸ் குடிமக்கள் இடையே பெரும் கண்டனத்தையும் அதிருப்தியும் ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் தேசிய கீதத்தை முறையாக பாடுவதற்கும் இசைப்பதற்கும் அவர்களுக்கு முன்னதாகவே பயிற்சி வழங்கப்படவில்லை என்பதையே இது காட்டுவதாகவும், இது எங்களை அவமதிப்பது போல் உள்ளது என பிரான்ஸ் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.