சுதுமலை தெற்குப் பகுதியிலுள்ள வீடொன்றின் விறாந்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி, நேற்று அதிகாலை திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
5 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான முச்சக்கரவண்டி இவ்வாறு திருட்டுப்போயுள்ளதாக செல்வன் ஸ்ரீதரன் என்பவர் முறைப்பாடு செய்துள்ளார்.
முச்சக்கரவண்டியை இருவர் தள்ளிச் செல்லும் காட்சி, வீட்டுக்கு அருகிலுள்ள கடையொன்றில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கமராவில் பதிவாகியுள்ளது. அந்தப் பதிவை வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.