யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் தாவடிப் பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கிடைத்த தகவலுக்கமைய இன்று (17) காலை இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சுமார் 50 வயதுக்கும் மேற்பட்ட ஒருவரே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.