ஜப்பானில் நிலநடுக்கம் 40க்கும் அதிகமானோர் பலி; பலரைக் காணவில்லை!

0
359
9782ஜப்பானில் நேற்று சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 40க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். பல நூற்றுக் கணக்கானவர்களை காணவில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
தென் தீவான கியூசுவில் நில நடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்றும் இழப்புக்கள் தொடர் பான துல்லியமான தகவல்களை உடனடியாக மக்களுக்கு வழங்கி, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கையை விரைவாக முன்னெடுக்கு மாறும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ ஆபே உத்தரவிட்டுள்ளார்.
7.4 அளவு கொண்ட இந்த நில நடுக்கத்தினால் வீடுகள், மேம்பாலங்கள் மற்றும் கட்டடங்கள என பல உடைந்து சுக்குநூறானதுடன், ஆங்காங்கே மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
இந்நிலநடுக்க பாதிப்பினால் உயிரிழந்த 40 பேரினுடைய சடலங்கள் நேற்று மாலை வரை மீட்கப்பட்டிருந்ததுடன் ஆயிரத்து 500 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
மேலும் நிலநடுக்கம் காரணமாக ஏராளமானோர் இடுபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
இவ்வாறு இடிபாடுகளுக்குள் சிக்கி காணாமல் போன பல நூற்றுக்கணக்கானவர்களை தேடும் நடவடிக்கையில் மீட்புப் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் அங்கு பெய்துவரும் கடும் மழை மற்றும் காற்று காரணமாக மீட்புப் பணிகளுக்கு இடையூறுகள் ஏற்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கியூஹ_ தீவின் கடற்கரைப் பகுதிகளில் உள்ளவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட் டுள்ளதுடன்.
கடல் நீரில் கடுமையான சுழற்சி இருக்கும் எனவும் ஜப்பானிய வானிலை ஆய்வு நிலை யம் எச்சரித்துள்ளது.
மேலும் நிலநடுக்கம் ஏற்பட்ட பல இடங்க ளில் இடிபாடுகளில் மக்கள் சிக்கியுள்ளனர் என்றும் அவர்களை மீட்குமாறு கோரி தொட ர்ந்து தொலைபேசி அழைப்புகள் வருவதாக வும் ஜப்பானிய ஊடகங்கள் தகவல் வெளியி ட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here