இலங்கையில் மனிதவுரிமையை வலுவாக உறுதிப்படுத்துவதற்கும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் பிரித்தானியாவால் வழங்கப்படுகின்ற ஒத்துழைப்பினை மேலும் அதிகரிக்கவுள்ளோம் என தெரிவித்துள்ள பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் மனித உரிமை தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் போக்குகளை தான் அறிந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த வாழ்த்துச் செய்தியில், பிரித்தானியாவில் வாழும் இலங்கையர்கள் உள்ளிட்ட அனைத்து இலங்கை மக்களுக்கும் தமிழ், சிங்கள புத்தாண்டு வாழ்த்துக்களை அவர் தெரிவித்துள்ளார்.
இலட்சக்கணக்கான மக்கள் புத்தாண்டை கொண்டாடும் வகையில் அவர்களின் அனைத்து உற வினர்களையும் சந்தித்துக் கொள்வதன் பெறுமதியை தான் அறிந்து கொண்டுள்ளேன்.
இலங்கையில் மனிதவுரிமையை உறுதிப்படுத்துவதற்கும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் பிரித்தானிய அரசு வழங்கும் ஒத்து ழைப்பை மேலும் அதிகரிக்கவுள்ளோம். இருவேறு இன மக்கள் ஒரு
நாட்டுக்குள் ஒரே நாளில் ஒன்றான ஒரு பண்டிகையை கொண்டாடி மகிழ்வது உறுதி யான பிணைப்பை தொடரவாய்ப் பளிக்கும்.
இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக் கம் தொடர்பில் தற்போது அடைந் திருக்கும் குறிப்பிடத்தக்க விருத் தியை நான் அறிந்து கொண்டு வருகின்றேன்.
மேலும் பாதிக்கப்பட்ட சமூக மக்கள் தமது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் வகை யிலான பொறிமுறைகளும் அங்கு அமைக்கப்பட வேண்டும் என தனது வாழ்த்துச் செய்தியில் பிரிட் டன் பிரதமர் தெரிவித்துள் ளார்.