‘புலம்பெயர் ஊடக ஒன்றிணையம்” அமைப்பின் இரண்டாவது செயலமர்வு!

0
245

udaka santhippuஊடகங்களின் ஒன்றிணைந்த செயற்பாட்டின் மூலம் தேசியத்திற்கு வலுச்சேர்க்கும் நோக்கில் ‘புலம்பெயர் ஊடக ஒன்றிணையம்” அமைப்பின் இரண்டாவது செயலமர்வு நேற்று (16.04.2016) சனிக்கிழமை Nanterre  பகுதியில் பிற்பகல் 2.00 மணி முதல் 18.00 மணி வரை இடம்பெற்றது.

கடந்த 26.03.2016 சனிக்கிழமை பிரான்ஸ் ஊடகமையத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்கள், ஊடகங்கள் மற்றும் பொதுச் சங்கங்களின் ஒன்றிணைவுக் கருத்தமர்வு ஆரம்ப நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிரான்சின் பொண்டிப் பகுதியில் காலை 10 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் பல ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களும் பல பொதுச் சங்கங்களையும் சேர்ந்த பிரதிநிதிகளும் சந்தித்திருந்தனர். பொதுவான ஒரு சுயாதீன அமைப்பு ஒன்றை நிறுவுவதன் மூலம் ஊடகங்களையும், பொதுச் சங்கங்களையும் தமிழ்த் தேசியம் என்ற ஒற்றைப் புள்ளியில் இணைக்கும் முயற்சியின் அடிப்படையில் இந்தச் சந்திப்பானது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நேற்றைய இரண்டாவது சந்திப்பில் முதல்நாள் கருத்தமர்வில் பேசப்பட்ட விடயங்கள், மற்றும் நிகழ்வு பற்றிய அறிக்கை செயலாளரால் வாசித்தளிக்கப்பட்டதுடன், முதல்நாள் கருத்தமர்வில் தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்டிருந்த நிர்வாக உறுப்பினர்கள் மீள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு நிரந்தர நிர்வாக உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.

அத்துடன், அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பல ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் பல கருத்துக்களை முன்வைத்திருந்ததுடன் புதிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டது.

இக்கருத்தமர்வில் புலம்பெயர் தேசத்தின் ஊடகவியலாளர்கள் பலரும் கட்டமைப்புப் பிரதிநிதிகள் மற்றும் மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டு தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here