இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களின் 146 விண்ணப்பங்கள் – சுவிஸர்லாந்து

0
226

Swiss-Flagஇலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களிடமிருந்து 146 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான சுவிஸர்லாந்தின் அரச செயலகம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த மூன்று மாதத்தில் மாத்திரமே இந்த விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக சுவிஸர்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக 8315 புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் இதுவரையில் கிடைத்துள்ள புகலிடக் கோரிகை விண்ணப்பங்களில் 45 வீதத்தால் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான சுவிஸர்லாந்தின் அரச செயலகம் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here